ஐக்கிய நாடுகள் சபையின் உள்ளக பரிசீலனை குழுவினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அறிக்கையின் நேர்மைத்தன்மை குறித்து இலங்கை கேள்வி எழுப்பியுள்ளது.
இலங்கையில், ஐக்கிய நாடுகளின் செயற்பாடுகள் தொடர்பாக ஆராய்வதற்காக ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் நியமித்த உள்ளக பரிசீலனை குழு சமர்பித்த அறிக்கை வெளியாகிய முறை, அதிலடங்கியுள்ள விடயங்கள் தொடர்பாக கேள்வி எழும்பியுள்ளது.
ஐக்கிய நாடுகள் நடவடிக்கையை விமர்சிக்கும் வகையிலேயே வெளிவிவகார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கை அமைந்துள்ளது. அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
இந்த அறிக்கையின் நேர்மைத்தன்மை, இருட்டடிப்பு செய்யப்படட் அறிக்கையின் பகுதிகள், இலங்கை அரசாங்கத்துக்கு எதிரான குற்றசாட்டுகள் என்னும் விடயங்கள் விமர்சனத்திற்குறியதாகும்.
பெட்ரி அறிக்கை எனப்படும் இந்த அறிக்கையும் தருஸ்மன் அறிக்கை கசியப்பட்டது போன்றே செயலாளர் நாயகத்திடம் சமர்பிக்கப்பட்ட முன்னரே கசியவிடப்பட்டுள்ளது. இந்த பெட்ரி அறிக்கை யுத்தத்தின் இறுதிக் கட்டத்தில் இலங்லையில் ஐக்கிய நாடுகளின் செயற்பாடுகள் குறித்த உள்ளக பரிசீலனையாகும்.
யுத்தத்தின் இறுதிக் கட்டத்தில் இடம்பெற்ற சிவிலியன் மரணங்கள், காயங்களை பெரிதாக்கி கூறியமை, பொதுமக்கள் நிறைந்த பகுதிகளில் வேண்டுமென்றே ஷெல் தாக்குதல் நடத்தியமை, வடபகுதிக்கு மருந்து, உணவு போகாமல் தடுத்தமை, நலன்புரி கிராமபுறங்களை இராணுவத்தின் தடுப்பு முகாமாக சித்தரித்தமை பற்றி அரசாங்கம் தனது கண்டனத்தை; வெளிப்படுத்தியுள்ளது.
அங்கத்துவ நாடுகளை ஐ.நா சமமாக நடத்த வேண்டும். இந்த அறிக்கையையும் ஐ.நா.சமமாக நடத்த வேண்டும். இந்த அறிக்கையை தயாரித்தவர்கள் தமக்கு வழங்கப்பட்ட பட்டயத்துக்கு அமையவே செயற்பட வேண்டும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.
-->
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’