வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வெள்ளி, 26 அக்டோபர், 2012

இருதரப்பு இராணுவ ஒத்துழைப்பு தொடர்பில் கோட்டாபய – ஏ.கே.அந்தோனி கலந்துரையாடல்



லங்கை பாதுகாப்பு படையினருக்கு பயிற்சி அளிப்பதற்கு எதிராக தமிழ் நாட்டில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்படும் பின்புலத்தில், தமக்கிடையே பாதுகாப்பு ஒத்துழைப்பை மேலும் வளர்த்துக்கொள்வதற்காக இந்தியாவும் இலங்கையும் விசேட கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளன.
இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனனின் அழைப்பின் பேரில் இந்தியா சென்றுள்ள பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ, இந்திய பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே.அந்தோனியை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். அத்துடன், இந்திய பாதுகாப்பு செயலாளர் சசிகந்த் ஷர்மாவையும் கோட்டாபய ராஜபக்ஷ இதன்போது சந்தித்துள்ளார். இந்த சந்திப்பின் போது இரு தரப்புக்கும் இடையிலான இராணுவ ஒத்துழைப்பின் சகல அம்சங்களையும் இவர்கள் கலந்துரையாடியதாக கூறப்படுகின்றது. எதிர்ப்புகள் காணப்பட்ட போதும் இராணுவ உறவுகளை தொடரவுள்ளதாக இந்திய பாதுகாப்பு அமைச்சு கூறியுள்ளது. பாதுகாப்பு படையினரை பயிற்றுதல் மற்றும் கூட்டுப் படைப் பயிற்சி ஆகியவற்றை நடத்துவதற்கு அமைச்சு திட்டமிட்டு வருகின்றது. தமிழ்நாட்டு அரசியல் கட்சிகளின் எதிர்ப்புகளை சமாளிக்கும் வகையில் தென்னிந்திய மாநிலங்களுக்கு தொலைவில் கூட்டுப் பயிற்சிகளை நடத்துமாறு அமைச்சு பணித்துள்ளது. -->

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’