சட்டம் இயற்றும் துறை, நிறைவேற்றும் துறை மற்றும் நீதித்துறை ஆகியன பொதுமக்களின் இறைமையைப் பாதுகாக்கவே செயற்பட வேண்டுமே தவிர ஒவ்வொருவரினதும் அதிகாரத்தை வெளிப்படுத்தும் வகையில் அமையக்கூடாது என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
இரத்தினபுரியில் இடம்பெற்ற மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். மக்களின் இறைமையை எவராலும் தட்டிப்பறிக்க முடியாது. இறைமையைக் கட்டிக் காப்பதற்காக முன்னெடுக்கப்பட வேண்டிய சகல நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். அரசாங்கத்தின் அபிவிருத்தி நடவடிக்கையில் கிராமங்கள் மற்றும் நகரங்களை வளப்படுத்த பிரதேச சபை, மாகாணசபை மாத்திரமல்ல அமைச்சர்கள் மற்றும் முழு நாடும் ஒன்றுபட வேண்டும் என ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டுள்ளார். -->
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’