2014ஆம் ஆண்டில் நடைபெறவுள்ள உலக இளைஞர் மாநாட்டை இலங்கையில் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது என்று ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் நாயகம் பான் கி மூன், இளைஞர் விவகார மற்றும் திறன்கள் அபிவிருத்தி அமைச்சர் டலஸ் அழகப்பெருமவிடம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.
இது தொடர்பில், இளைஞர் விவகார மற்றும் திறன்கள் அபிவிருத்தி அமைச்சரின் ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, அண்மையில் அமெரிக்காவின் நியூயோர்க்கில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகளின் தலைமையகத்தில் நடைபெற்ற 67ஆவது பொதுச்சபை மாநாட்டின் போதே பான் கீ மூன்இவ்வாறு தெரிவித்துள்ளார். இவ் இளைஞர் மாநாடானது முதல் தடவையாக ஆசிய நாடொன்றில் நடைபெறவுள்ளதென்பது குறிப்பிடத்தக்க ஒரு விடயமாகுவதோடு 1976 ஆண்டு காலகட்ட வரலாற்றில் நமது நாட்டில் நடைபெற்ற அணிசேரா மாநாடு மற்றும் பிராந்திய ஒத்துழைப்புக்கான தெற்காசிய சங்கத்தின் மாநாடு போன்ற சர்வதேசரீதியான மாநாடுகள் போன்ற ஒரு மாநாடாக இது அமையும். அத்துடன் 2014ஆம் ஆண்டில் நடைபெறவுள்ள இவ் இளைஞர் மாநாடென்பது இலங்கையில் வாழும் இளைஞர் சமுதாயத்தை ஊக்குவிக்கும் முகமாகவும் அமையும் என்பதும் குறிப்பிடத்தக்கது. பான் கீ மூனை உத்தியோகபூர்வமாக சந்தித்த அமைச்சர் டலஸ் அழகப்பெரும, யுத்தத்திற்கும் முன், யுத்தத்திற்கு பின்னான காலகட்டங்களிலும் மற்றும் தற்போதைய காலகட்டங்களிலும் இலங்கையில் வாழும் இளைஞர் சமுதாயம் பெற்றுள்ள அபிவிருத்தியை பற்றி தெளிவுபடுத்தினார். அதன் பின் ஐக்கிய நாடுகளின் இளைஞர் திட்டத்தின் (ருண்னுநுளுயு) சமூக கொள்கை மற்றும் அபிவிருத்தி பிரிவின் பணிப்பாளர் நாயகம் டனியெலா பாஸையும் சந்தித்துப் பேச்சு நடத்தினார். இளைஞர் விவகார மற்றும் திறன்கள் அபிவிருத்தி துறையில் நமது நாடு பெற்றுள்ள வெற்றிகளையும் மற்றும் எதிர்பார்ப்புக்களையும் அவ் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றிக் கொள்வதற்காக எடுக்கப்பட்டிருக்கும் வழிமுறைகளையும் முஸ்லிம் மற்றும் தமிழ் இளைஞர்களின் பங்குபெறுதலையும் இவ்வேலைத்திட்டங்களில் ஈடுபடுவதற்காக அமைக்கப்படும் விதிமுறைகள் பற்றியும் டனியெலா பாஸ் அவர்களுக்கு தெளிவுபடுத்தினார். அமைச்சர் டலஸ் அழகப்பெருமவுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையின் பின்னர் தனது கருத்தை வெளியிட்ட டனியல் பாஸ், இளைஞர் நாடாளுமன்றத்தை உருவாக்குவதன் மூலம் இலங்கையில் இளைஞர் சமுதாயத்தை பலப்படுத்துவதற்காகவும் அவர்களை ஊக்குவிப்பதற்காகவும் எடுக்கப்பட்டுள்ள திட்டங்களைப் பாராட்டியதோடு 2014 ஆண்டில் இலங்கையில் நடைபெறவுள்ள உலக இளைஞர் மாநாட்டுக்காக தனது முழு ஒத்துழைப்பை வழங்குவதாகவும் தெரிவித்துள்ளார். -->
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’