வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

திங்கள், 10 செப்டம்பர், 2012

ஒருமைப்பாட்டு சிறப்பாராதனையில் அமைச்சர் அவர்கள் பங்கேற்பு



டுவில் தேவாலயத்தில் இடம்பெற்ற ஒருமைப்பாட்டு சிறப்பு ஆராதனையில் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்துள்ளார். (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)
மானிப்பாய் வீதியில் அமைந்துள்ள உடுவில் தென்னிந்திய திருச்சபை தேவாலயத்திற்கு இன்றையதினம் (09) விஜயம் மேற்கொண்ட அமைச்சர் அவர்கள் மேற்படி ஆராதனையில் கலந்து கொண்டார்.

இதன்போது கருத்துரை வழங்கிய அமைச்சர் அவர்கள் கடந்த சில காலங்களாக தவறான புரிதல்களுக்கூடாக ஏற்பட்டிருந்த விரிசல்கள் இன்று ஒரு ஒருமைப்பாட்டுக்குள் வந்திருப்பதை காணும்போது மகிழ்ச்சியளிக்கின்றது எனவும், அனுபவத்திற்கூடாக உணர்ந்து கொண்டதன் பயனாக மீண்டும் நல்லதொரு இயல்புச் சூழல் தோன்றியுள்ளதென்றும் சுட்டிக்காட்டினார்.

இந்த ஐக்கியத்திற்காக துறைசார்ந்த பலரும் பல்வேறு முயற்சிகளையும் மேற்கொண்டிருந்ததுடன், என்னையும் அணுகியிருந்தார்கள். எல்லோரது முயற்சியும் இன்று பயனளித்துள்ளது.

அந்த வகையில் எனது மகிழ்ச்சிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்ளும் அதேவேளை, ஐக்கியத்திற்கூடாக இத் திருச்சபை கடந்த காலங்களில் பல்வேறு மக்கள் சேவைகளைச் செய்துள்ளதாகவும், அவ்வாறான மக்கள் சேவைகள் தொடர வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டார்.

இவ்வொருமைப்பாட்டின் மூலம் உடுவில் தேவாலயத்தில் தென்னிந்தியத் திருச்சபை மக்களும், அமெரிக்க சிலோன் மிஷன் சபையைச் சேர்ந்த மக்களும் வழிபாடுகளில் எதிர்காலங்களில் ஒன்றிணைந்து பங்கெடுக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.



0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’