வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

செவ்வாய், 11 செப்டம்பர், 2012

இந்திய அரசுதான் எமக்கு ஆயுதம் வழங்கியது: அமைச்சர் டக்ளஸ்



1986ஆம் ஆண்டு சென்னையில் கலகம் விளைவித்ததாகவும் ஆயுதம் வைத்திருந்ததாகவும் மட்டுமே என்மீது தேவையில்லாமல் குற்றம் சாட்டப்பட்டிருக்கிறது. ஆனால், அந்த ஆயுதங்களை எங்களுக்கு இந்திய அரசுதான் வழங்கியிருந்தது என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கூறினார்.
1986ஆம் ஆண்டு சூளைமேடு கொலைச் சம்பவத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை தேடப்படும் குற்றவாளியாக சென்னை நீதிமன்றம் அறிவித்துள்ளமை தொடர்பில் அமைச்சரிடம் தொடர்புகொண்டு கேட்டபோதே அவர் மேற்படி கூறினார். அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தொடர்ந்தும் தமிழ்மிரருக்கு கூறுகையில்... 'என்மீது கொலைக் குற்றச்சாட்டுகள் இல்லை. கலகம் விளைவித்ததாகவும் ஆயுதம் வைத்திருந்ததாகவுமே குற்றம் சாட்டப்பட்டிருக்கிறது. அதாவது இந்திய சட்டப் பிரிவில் ஈபிகோ 148ஆம் பிரிவின் கீழேயே என்மீது குற்றம் சுமத்தப்பட்டிருக்கிறது. கொலைக் குற்றம் என்பது ஈபிகோ 302. அரசியல் காரணங்களை வைத்துக்கொண்டு என்மீது தேவையில்லாமல் வீண் பழி சுமத்தப் பார்க்கிறார்கள். ஆயுதம் வைத்திருந்ததாக கூறுகிறார்கள். உண்மை என்னவெனில் அந்த ஆயுதங்களை எங்களுக்கு வழங்கியதே இந்திய அரசுதான். எங்களுக்கு மட்டுமல்ல அனைத்து இயக்கங்களுக்கும் ஆயுதங்களை வழங்கியது இந்திய அரசுதான். எங்களிடம் ஆயுத பலம் அந்நேரத்தில் இருக்கவில்லை. இந்நிலையில் எங்களுக்கு ஆயுதங்களை வழங்கி எம்மை ஊக்குவித்தது இந்திய அரசுதான். நிலைமை இப்படி இருக்கையில்தான் என்மீது அரசியல் காரணங்களுக்கான தேவையில்லாமல் கொலை குற்றச்சாட்டினை சுமத்தியிருக்கிறார்கள். இதற்கு ஆட்சேபம் தெரிவித்து நாங்கள் மேன்முறையீடு செய்துள்ளோம். இந்த சூளைமேடு விவகாரம் தொடர்பாக பலமுறை விளக்கம் அளித்துவிட்டோம். குற்றப் பத்திரிகையில்கூட, கொலையுண்ட இளைஞனை வாகனத்தில் கொண்டு செல்லும்போதே நான் அவ்விடத்திற்கு வந்ததாக குறிப்பிடப்பட்டிருக்கிறது. இப்படியிருக்கையில் என்னை கொலைகாரனாக சித்திரிப்பது எவ்வகையில் நியாயமானது? நான் அறிந்தமட்டில் அக்கொலை நடைபெற்ற இடத்தில் இருந்தவர்கள் - இன்று இங்கு அரசியல் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். அவர்களை விட்டுவிட்டு என்மீது மட்டும் குற்றம் சாட்டுவது ஏனென தெரியவில்லை. இந்திய நீதிமன்றிற்கு தேவைப்படின் சட்டர்லைட் வீடியோ தொடர்பாடல் முறையில் என்னுடைய கருத்துக்களை பகிர்ந்துகொள்ள நான் எப்பொழுதும் தயாராகவே இருக்கிறேன். அரசியல் ஆதாயம் தேடுவதற்காக மீண்டும் மீண்டும் என்மீது பழிபோடுவதை இவர்கள் நிறுத்த வேண்டும் என்றும் கோருகிறேன்' என்று கூறினார். -->

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’