2012 ஆம் ஆண்டுக்கான ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து யாழ்.மாவட்டத்திற்கான பல்வேறுபட்ட அபிவிருத்தி வேலைத்திட்டங்களுக்கான முன்மொழிவுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஈ.பி.டி.பியின் யாழ்.மாவட்ட அமைப்பாளர் கந்தசாமி கமலேந்திரன் (கமல்) அவர்கள் தெரிவித்தார்.
ஈ.பி.டி.பி பாராளுமன்ற உறுப்பினர்களான அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, முருகேசு சந்திரகுமார், சில்வேஸ்திரி அலன்ரின் ஆகியோரினால் 115 இலட்சம் ரூபா வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளன. இதனடிப்படையில் யாழ்.குடாநாட்டிலுள்ள 15 பிரதேச செயலகப் பிரிவுகளில் 12 பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு பாராளுமன்ற உறுப்பினர்களான அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, சில்வேஸ்த்திரி அலன்ரின் ஆகியோரினாலும், 3 பிரதேச செயலக பிரிவுகளுக்கு பாராளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமாரினாலும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி கோப்பாய் 9 இலட்சத்து 70 ஆயிரம் ரூபா, ஊர்காவற்துறை 7 இலட்சத்து 70 ஆயிரம் ரூபா, வேலணை 9 இலட்சத்து 5 ஆயிரம் ரூபா, சண்டிலிப்பாய் 6 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா, நல்லூர் 8 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா, நெடுந்தீவு 8 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா, கரவெட்டி 5 இலட்சத்து 80 ஆயிரம் ரூபா, மருதங்கேணி 7 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா, பருத்தித்துறை 7 இலட்சத்து 20 ஆயிரம் ரூபா, காரைநகர் 5 இலட்சத்து 80 ரூபா, தென்மராட்சி 8 இலட்சத்து 5 ஆயிரம் ரூபா, சங்கானை 6 இலட்சம், உடுவில் 10 இலட்சத்து 15 ஆயிரம் ரூபா என்ற அடிப்படையில் ஒதுக்கப்பட்டுள்ளது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’