வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

சனி, 25 ஆகஸ்ட், 2012

இலங்கை, சர்வதேச சமூகம் ஆகியவற்றிற்கு இடையில் சிறந்த உறவுகளை பேண ஜப்பான் உதவும்: யசூசி அகாஷி



இலங்கை மற்றும் சர்வதேச சமூகம் ஆகியவற்றிற்கு இடையில் சிறந்த உறவுகளை பேண ஜப்பான் தொடர்ந்து உதவும் என இலங்கைக்கான ஜப்பான் விசேட பிரதிநிதி யசூசி அகாஷி தெரிவித்தார். அத்துடன் இலங்கையில் சிறந்த நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்காக ஜப்பான் தொடர்ந்து செயற்படும் என அவர் குறிப்பிட்டார்.
உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டு 22ஆவது தடவையாக இலங்கை வந்துள்ள யசூசி அகாஷி - ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, அமைச்சர்களான ஜீ.எல்.பீரிஸ், பஸில் ராஜபக்ஷ, ரவூப் ஹக்கீம், மஹிந்த சமரசிங்க, எதிர்க்கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்க, தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க ஆகியோருடன் சந்திப்பு நடத்தினார். இதற்கு மேலதிகமாக யாழ்பாணம் மற்றும் கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களுக்கு நேரடி விஜயம் செய்து கள நிலவரங்களை பார்வையிட்டார். இதனையடுத்து இலங்கை ஊடகவியலாளர்களுடனான சந்திப்பை கொழும்பிலுள்ள ஜப்பானிய தூதுவரின் வாசஸ்தளத்தில் இன்று சனிக்கிழமை மேற்கொண்டார். இதன்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்து உரையாற்றி அகாஷி, "தற்போது வட மாகாணத்தில் பாரிய மாற்றங்களை காண முடிகின்றது. கடந்த விஜயங்களை விட இந்த தடவை யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட போது குறித்த மாற்றங்களை அவதானிக்க முடிந்தது. இந்த அபிவிருத்தி திட்டங்களை வட மாகாணத்தில் மேற்கொண்டமைக்காக இலங்கை அரசு மற்றும் மக்களுக்கு நான் நன்றி தெரிவிக்கின்றேன். கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நிறைவேற்றுவதற்கான தேசிய செயற்திட்டம் தொடர்பில் கலந்துரையாடுவதற்கே இம்முறை இலங்கைக்கு விஜயம் செய்தேன். நான் சந்திப்பு மேற்கொண்ட அனைவருடனும் இந்த திட்டம் தொடர்பில் கலந்துரையாடினேன். அத்துடன் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நிறைவேற்றுவதற்கான தேசிய செயற்திட்டத்தை வரவேற்பதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் இன்று காலை இடம்பெற்ற சந்திப்பில் தெரிவித்தேன். அத்துடன் குறித்த செயற்திட்டத்தின் அமுல்படுத்தல் தொடர்பில் ஜப்பான் கண்கானிப்பினை மேற்கொள்ளும். அத்துடன் இந்த செயற்திட்டத்தின் அமுல்படுத்தலின் ஊடாக சர்வதேச சமூகம் எதிர்ப்பார்க்கும் காத்திரமான விளைவினை காண்பிக்க முடியும். இலங்கையில் அபிவிருத்திகளை மேற்கொள்கின்றதே தவிர நாட்டை கைப்பற்ற வேண்டும் என்ற நோக்கில் ஒரு போதும் ஜப்பான் செயற்படவில்லை. யுத்தத்தினால் உள்நாட்டில் இடம்பெயர்ந்த 98 சதவீதமான மக்கள் இதுவரை மீள்குடியேற்றப்பட்டுள்ளனர். ஏனையோர் ஓகஸ்ட் மாத இறுதிக்குள் மீள்குடியேற்றப்படுவர் என இலங்கை அரசினால் உறுமொழி வழங்கப்பட்டாலும் மிக விரைவில் மீள்குடியேற்றப்படுவர் என நம்புகின்றோம். அத்துடன் முன்னாள் போராளிகளுக்கான புனர்வாழ்வு செய்றபாடு மிகவும் வரவேற்கத்தக்க விடயமாகும்" என்றார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’