வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

சனி, 25 ஆகஸ்ட், 2012

மக்களுக்கிடையில் இன முறுகலை தூண்டி அரசியல் செய்யாதீர்கள்: ஜனாதிபதி



க்களுக்கிடையில் இன முறுகலை தூண்டிவிட்டு அரசியல் ஆதாயம் தேடவேண்டாம் என அரசியல்வாதிகளுக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வேண்டுகோள் விடுத்துள்ளார். எட்டு பிரதேசங்களிலுள்ள மக்களுடன் சட்டர்லைட் தொலைத்தொடர்பின் மூலம் நேரடியாக உரையாடும் நிகழ்வு இன்று இரவு நடைபெற்றது. இந்நிகழ்வில் அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த நபரொருவர் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கும்போதே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மேற்படி கூறினார்.
“மாகாணசபை தேர்தல் என்பது இன்று வரும், நாளை செல்லும். இச்சந்தர்ப்பத்தில் மக்களுக்கிடையில் ஜாதி, பேதங்களை தூண்டிவிட்டு அரசியல்செய்ய யாரும் முன்வர வேண்டாம். இப்படி இனமுறுகலை தூண்டி விட்டதனால்தான் நாங்கள் 30 வருடங்களாக கஷ்டங்களை அனுபவித்தோம். இனியும் அப்படியொரு தவறை யாரும் செய்ய முன்வர வேண்டாம். ஜாதி, பேதங்களை தூண்டிவிடுவதன் மூலம் எதனையும் சாதித்துவிட முடியாது. இனங்களுக்கிடையில் ஒற்றுமையை நிலைநாட்டி வாழ்வதற்கு நாம் துணைநிற்க வேண்டும். ஜாதி, மத பேதங்களை மறந்து நாம் அனைவரும் இலங்கை மக்கள் என்ற ஒருமைப்பாட்டுடன் வாழ வேண்டும். அப்பொழுதுதான் ஆசியாவின் ஆச்சரியமான நாடாக நாம் மாற முடியும்” என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மேலும் குறிப்பிட்டார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’