பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் அபிவிருத்தி அமைச்சின் ஏற்பாட்டின் கீழ் முன்னெடுக்கப்பட்டு வரும் வாழ்வெழுச்சி திட்ட கண்காட்சி மூலமாக மாவட்டங்கள் தோறும் அதன் அடைவு மட்டங்கள் தொடர்பிலான கலந்துரையாடல் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தலைமையில் நடைபெற்றுள்ளது. (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)
இன்றைய தினம் (25) கொழும்பு மருதானையில் அமைந்துள்ள அமைச்சின் கேட்போர் கூடத்தில் மேற்படி விடயம் தொடர்பிலான கலந்துரையாடல் நடைபெற்றது.
இதன்போது பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் அபிவிருத்தி அமைச்சுடன் இணைந்த ஏனைய நான்கு அமைச்சுக்களின் கீழான 16 நிறுவனங்களினதும் மாவட்டரீதியிலான அடைவு மட்டங்கள் குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டது.
குறிப்பாக வாழ்வெழுச்சித் திட்ட கண்காட்சிகள் நடாத்தப்பட்ட மாவட்டங்களில் கண்காட்சிகளின் பின்னர் மூலப்பொருள் வழங்கல் தொழில்நுட்ப பயிற்சி வங்கிக்கடன் வழங்கல், சந்தைவாய்ப்பு மற்றும் பயனாளிகள் அடைந்துள்ள பெறுபேறுகள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது.
இதனிடையே எதிர்காலத்தில் குறித்த செயற்றிட்டங்களை மென்மேலும் விரிவாக்குவது மற்றும் மேம்படுத்துவது உள்ளிட்ட விடயங்களில் துறைசார்ந்த அனைவரும் ஒன்றிணைந்து உழைக்க வேண்டுமென இதன்போது அமைச்சர் அவர்கள் கேட்டுக் கொண்டார்.
இதில் மாவட்ட செயலாளர்களின் பிரதிநிதிகளும் பங்குபற்றி முன்னேற்றங்ள் குறித்து கருத்துக்களை முன்வைத்திருந்தனர்.
இதன்போது பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் சிவஞானசோதி, அமைச்சரின் ஆலோசகர் ஜெகராசசிங்கம், வாழ்வெழுச்சித் திட்டப் பணிப்பாளர் கமகே ஆகியோர் உடனிருந்தனர்.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’