வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வியாழன், 26 ஜூலை, 2012

தமிழக மீனவர்களை விடுவிக்கும்படி இலங்கையிடம் இந்தியா வலியுறுத்தல்



லங்கை கடற்பரப்பில் நுழைந்ததான குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 23பேரையும் உடனடியாக விடுவிக்க வேண்டுமென இந்தியா வலியுறுத்தியுள்ளது.
இலங்கை கடற்படைக் கப்பல்களில் மோதியதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள மேற்படி மீனவர்களை விடுவிக்கும்படி இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா, இலங்கை அரசாங்கத்திடம் கோரியுள்ளார். கச்சதீவுக்கு அருகில் மீன்பிடித்தலில் ஈடுபட்டிருந்த போது இலங்கை கடற்படையினரால் மேற்படி 23 மீனவர்களும் கைது செய்யப்பட்டதாக ராமேஸ்வரம் மீன்பிடி திணைக்கள அதிகாரிகள் கூறியுள்ளனர். இலங்கை கடற்படையினர் மேற்படி மீனவர்களின் 20 படகுகளைத் தாக்கியதுடன் அவர்களது மீன்பிடி வலைகளையும் பறித்துள்ளதாக ராமேஸ்வரம் கடற்றொழிலாளர் சங்கத் தலைவர் எமிரேட் குறிப்பிட்டுள்ளார். இலங்கை மீனவர்களின் மீன்பிடி உபகரணங்களை சேதப்படுத்தியதற்காகவும் எல்லைமீறி வந்து மீன் பிடித்துக்கொண்டிருந்தமைக்காகவும் தலைமன்னார் கடற்பரப்பில் வைத்து மேற்படி மீனவர்களை செய்து செய்ததாக இலங்கை கடற்படையின் பேச்சாளர் கோசல வர்ணகுலசூரிய தெரிவித்தார். இதற்கு முன் ஜூலை முற்பகுதியில் இலங்கை கடற்பகுதியில் மீன் பிடித்துக்கொண்டிருந்த போது கைது செய்யப்பட்டதாக கூறப்பட்ட 10 மீனவர்களை மன்னார் நீதிமன்றம் விடுவிக்கும்படி கட்டளையிட்டமை குறிப்பிடத்தக்கது

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’