2000 ஆண்டில் தான் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்தபோது தன்னை படுகொலை செய்வதற்காக சில திட்டங்கள் தீட்டப்பட்டிருந்ததாக நோர்வேயின் முன்னாள் சமாதானத் தூதுவர் எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார்.
'சிங்கள தீவிரவாதிகளிடமிருந்து இந்த அச்சுறுத்தல் வந்ததாக நாங்கள் எடுத்துக்கொண்டோம்' என எரிக் சொல்ஹெய்ம் கூறியதாக நோர்வேயின் அப்ரன்போஸ்ரன் என்ற பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவின் ஆட்சிக்காலமான 2000ஆம் ஆண்டு மே மாதம் 22ஆம் திகதி மாநில செயலாளர் ரேமொன்ட் ஜோன்ஸனுடன் எரிக் சொல்ஹெய்ம் இலங்கை வந்திருந்தார். 3 நாள் விஜயத்தில் அவரின் மோட்டார் வாகனத் தொடரணி மீது குண்டுத் தாக்குதல் மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டிருந்து. தன்னை கொலை செய்வதற்கான முயற்சிகள் பற்றி தனக்கு தெரியப்படுத்தப்பட்டதை அவர் உறுதி செய்தார். சொல்ஹெய்ம் கொழும்புக்கு வருவதற்கு பல நாட்களுக்கு முன்னரே பொலிஸ் புலன் விசாரணை சேவைக்கு அச்சுறுத்தல் பற்றி அறிவிக்கப்பட்டிருந்தது. இலங்கையிலிருந்த தீவிரவாதக் குழுக்களுடன் தொடர்பிருந்த நோர்வேயிலிருந்த சிலர் மூலம் இந்தத் தகவல் கிடைத்ததாகவும் அவர் கூறினார். பல்வேறு சமயங்களில் எமக்கு இந்த அச்சுறுத்தல்கள் பற்றி தெரியப்படுத்தப்பட்டது. இலங்கையில் நாம் இருந்தபோது எமக்கு ஆபத்து உள்ளது என அறிந்திருந்தோம் எனவும் எரிக் சொல்ஹெய்ம் குறிப்பிட்டார். தனது பயணத்திட்டங்கள் இரகசியமாகவே மேற்கொள்ளப்பட்டதாகவும் அவர் கூறினார். 'பொலிஸ் பாதுகாப்புப் பிரிவு மெய்ப்பாதுகாவலர்கள் இன்றி நாங்கள் இலங்கைக்கு ஒருபோதும் சென்றது இல்லை. நாங்கள் சென்றிருந்தபோது அங்கு இலங்கை அரசாங்கத்தினதும் தமிழீழ விடுதலைப் புலிகளினதும் பாரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் காணப்பட்டன. ஆனாலும் அங்கு முழுமையான பாதுகாப்பு உத்தரவாதம் இருக்கவில்லை. பல சிங்களத் தலைவர்கள் கடும் பாதுகாப்புக்கு மத்தியிலேயே கொல்லப்பட்டனர்' எனவும் அவர் கூறினார். தமிழீழ விடுதலைப் புலிகள் பாரிய இராணுவ வெற்றிகளை கண்டிருந்த அத்தருணத்தில் கொழும்பில் பதற்றமான சூழ்நிலை காணப்பட்டது. சிங்கள இராணுவத்தை இந்தியாவுக்கு அனுப்பிவைக்கும் சாத்தியம் பற்றி நாம் உண்மையிலேயே பேச்சு நடத்தினோம்' எனவும் அவர் கூறினார். இலங்கையிலிருந்து எரிக் சொல்ஹெய்ம் வெளியேறியிருந்த தருணத்தில் கொழும்பிலுள்ள நோர்வேத் தூதரகத்திற்கு இனந்தெரியாதோரினால் குண்டு வீசப்பட்டது. அக்குண்டு தூதரகத்தின் கூரை மீதாகச் சென்று அயல்வீட்டு தோட்டத்தில் வீழ்ந்து வெடித்துள்ளது. தன்னை இலக்குவைத்தே இத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதா என்று தனக்கு தெரியவில்லை எனவும் எரிக் சொல்ஹெய்ம் கூறினார். அது அப்படி இருக்கலாம்;. அதை என்னால் அறிந்துகொள்வது சாத்தியமில்லை. நோர்வேக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கையாக நான் உணர்;ந்துகொண்டேன் எனவும் அவர் கூறினார். தமிழர்களுக்கு சமவுரிமை அவசியமாகும். ஆனால் அது இன்னமும் தீர்த்துவைக்கப்படவில்லை. இப்பிரச்சினை தீர்த்துவைக்கப்படாதுவிடின் எதிர்காலத்தில் மீண்டும் மோதல் வெடிக்கலாம் எனவும் அவர் கூறினார்.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’