வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

புதன், 18 ஜூலை, 2012

கைதடியில் அமைந்துள்ள அரச சிறுவர் பராமரிப்பு இல்லத்தின் மேம்பாடு தொடர்பாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நடவடிக்கை.

கை தடியில் அமைந்துள்ள அரச சிறுவர் பராமரிப்பு இல்லத்தின் மேம்பாடு தொடர்பில் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் ஆராய்ந்தறிந்ததுடன் அதன் மேம்பாடு தொடர்பாக நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள அமைச்சரின் பணிமனையில்; மேற்குறிப்பிட்ட விடயம் தொடர்பாக விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. இதன்போது தாய் தந்தையரை இழந்த மற்றும் பராமரிப்பற்ற ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகள் பராமரிக்கப்பட்டு வரும் நிலையில் குழந்தைகளைப் பராமரிப்பதில் எதிர்கொண்டுவரும் இடர்பாடுகள் தொடர்பில் கவனம் செலுத்திய அமைச்சர் அவர்கள் குழந்தைகள் பராமரிப்பிற்கென ஐந்து உதவியாளர்களை உடனடியாக நியமனம் செய்யுமாறு துறைசார்ந்தோரிடம் பணிப்புரை வழங்கினார். அத்துடன் சிறுவர் இல்லத்துக்கு விஜயம் செய்து நிலைமைகள் தொடர்பாக நேரில் ஆராய உள்ளதாகவும் அமைச்சர் அவர்கள் தெரிவித்தார். இதன்போது சிறுவர் நன்னடத்தை பராமரிப்பு திணைக்கள ஆணையாளர் விஸ்வரூபன் வைத்திய கலாநிதி; விஸ்ணுகாந்த் ஆகியோரும் உடனிருந்தனர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’