இ லங்கையின் அவுஸ்திரேலியாவுக்கான உயர்ஸ்தானிகர் திசேர சமரசிங்கவுக்கு எதிரான யுத்தக் குற்றச்சாட்டுக்களை 4 மாதங்களுக்கு முன்னர் தட்டிக்கழித்துவிட்டதாக அவுஸ்திரேலிய சமஷ்டி பொலிஸ் கூறியுள்ளது என கன்பெரா ரைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
சமரசிங்கவை இப்பதவிக்கு நியமித்தபோது அவுஸ்திரேலிய வெளிவிவகாரத் திணைக்களம் இவரை பிரச்சினைக்குரியவர் என குறிப்பிட்டது. இவர் இலங்கை சிவில் யுத்தத்தின் இறுதிக்காலத்தில் ஒரு சிரேஷ்ட கடற்படை அதிகாரியாக கடமையாற்றினார். இவர் யுத்தக் குற்றவாளி என அவுஸ்திரேலியாவிலிருந்த சர்வதேச ஜுரிகள் ஆணையகமும் அவுஸ்திரேலிய சமஷ்டி பொலிஸிடம் ஒக்டோபரில் முறைப்பாடு செய்தது. தமக்கு கிடைத்த தகவல்களின்படி இந்த முறைப்பாடுகள் விசாரணை ஒன்றுக்கான தகுதியை கொண்டிருக்கவில்லை என காணப்பட்டுள்ளதாக சமஷ்டி பொலிஸின் பேச்சாளர் கூறினார். இது பற்றி சர்வதேச ஜுரிகள் ஆணையகத்துக்கு மார்ச் 3 இல் அறிவித்துள்ளதாகவும் அவர் கூறினார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’