வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

திங்கள், 2 ஜூலை, 2012

நாடாளுமன்றத் தேர்தலில் 40 தொகுதிகளிலும் அதிமுக தோற்கும்: விஜயகாந்த்



ரும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகம், புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் அதிமுக தோற்கும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறினார்.
சோளிங்கரில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், மக்களுக்கு நல்லது செய்பவர்கள்தான் ஆட்சிக்கு வர வேண்டும். தமிழகத்தை ஆட்சி செய்தவர்கள் நல்லதைச் செய்திருந்தால் நாங்கள் ஏன் கட்சி ஆரம்பிக்க வேண்டும்?. எங்களது மடியில் கனம் இல்லை. அதனால், வழியில் பயம் இல்லாமல் தமிழகத்தைச் சுற்றி வருகிறோம். தமிழ்நாடு முழுவதும் தண்ணீர் பிரச்சனை தலைவிரித்தாடுகிறது. நெசவாளர்களுக்கும் பல்வேறு பிரச்சனைகள். விலைவாசி நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. தொழிலாளர்களுக்கு ஆலைகளில் சரியான ஊதியம் தரப்படுவதில்லை. இவையெல்லாம் தீர்க்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதே நிலை நீடித்தால் மக்களவைத் தேர்தலில் தமிழகம், புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் அதிமுக தோற்கும். மக்களை மத்திய, மாநில அரசுகள் கண்டுகொள்வதில்லை. இதனால்தான் ஜனாதிபதி தேர்தலை தேமுதிக புறக்கணித்துள்ளது என்றார் விஜயகாந்த். பின்னர் திருத்தணி தொகுதி தேமுதிக எம்எல்ஏ அருண் சுப்பிரமணியம், அந்தத் தொகுதியில் செய்து வரும் பணிகளை ஆய்வு செய்வதற்காக ஆர்.கே.பேட்டை, அம்மையார்குப்பம், கே.ஜி.கண்டிகை ஆகிய பகுதிகளுக்கு விஜய்காந்த் சென்றார். அங்கு விஜய்காந்த் பேசுகையில், மக்கள் வரிப்பணத்தை, ஆளும் கட்சியினர் கொள்ளை அடித்து வருகின்றனர். மக்களுக்கு தேவையான குடிநீர் வசதியை செய்து தருவதில்லை. மாநிலத்தில் மணல் கொள்ளை நடந்து வருகிறது. சட்டசபையில் எம்.எல்.ஏ. பேசினால், பாலபாடம் வேண்டாம் என்கின்றனர். தி.மு.க-அதிமுகவினர் மாறி மாறி கொள்ளை அடிப்பதால் தான், 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை, ஆட்சி மாற்றம் ஏற்படுகிறது. பள்ளி மாணவர்களுக்கு, இதுவரை இலவச சீருடை, காலணி வழங்கப்படவில்லை. ஏழை மக்களுக்கு மிக்ஸி, கிரைண்டர், மின் விசிறி வழங்குவதை விட, வீட்டுக்கு ஒருவருக்கு வேலை வழங்கினால், குடும்பம் நன்றாக இருக்கும். முதல்வர்கள் பொதுவாக தலைமைச் செயலகத்தில் இருந்து தான் ஆட்சி செய்வார்கள். ஜெயலலிதாவோ, கொடநாட்டில் இருந்து ஆட்சி நடத்துகிறார். என்னை சிறையில் தள்ள, ஏதாவது சந்தர்ப்பம் கிடைக்குமா என, கண்கொத்திப் பாம்பாக கண்காணித்து வருகின்றனர். அது முடியாது. ஆளும் கட்சிக்கு வரும் தேர்தலில் மக்கள் சரியான பாடம் புகட்ட வேண்டும் என்றார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’