வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

திங்கள், 11 ஜூன், 2012

இன்ரபோல் தரவு தளத்துடன் குடிவரவு, எல்லை கட்டுப்பாட்டு முறைமை இணைப்பு


லங்கை எல்லை பாதுகாப்பு முறைமையுடன் இன்ரபோல் தரவு சேவையை ஒன்றிணைத்தமையால் இலங்கையின் எல்லைப் பாதுகாப்பு மேலும் பலப்படுத்தப்பட்டுள்ளதாக பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ இன்று கூறினார்.
இந்த செயற்றிட்டத்துக்கு நிதியளித்த கனடா அரசாங்கத்துக்கு அவர் நன்றி தெரிவிப்பதாகவும் இத்திட்டத்தை ஆரம்பித்துவைத்து உரையாற்றிய அவர் கூறினார். இவ்வாறு தரவுத் தள சேவைகள் இணைக்கப்படுவது தென் ஆசியாவில் இதுவே முதல் தடவையாகும். இந்த முறைமையால் தொலைந்துபோன அல்லது திருடப்பட்ட பயண ஆவணங்களை திரும்ப வழங்கவல்லது. இதில் சர்வதேச குற்றவாளிகளின் புகைப்படங்கள், விரலடையாலங்களைப் பெற்றுக்கொள்ளவும் முடியும். 2004இல் ஆரம்பிக்கப்பட்ட இந்த முறைமையில் 2011 நவம்பரில் 32 மில்லியன் பதிவுகள் சேமித்து வைக்கப்பட்டிருந்தன. இன்ரபோல் முறைமையில் உலகெங்கும் உள்ள 187 நாடுகள் காணப்படுகின்றன. மொரட்டுவை பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் டாக்டர் சத்துர டி சில்வாவின் வழிநடத்தலின் கீழ் ஈ.பி.ஐ.சி. லங்கா மற்றும் இன்போமேற்றிக் இன்டர்நெஷனல் லிமிடெட் நிறுவனத்தால் இத்திட்டம் மேற்கொள்ளப்பட்டது. இந்த நிகழ்வில் கனேடிய உயர்ஸ்தானிகர் புரூஸ் லெவி மற்றும் குடிவரவு, குடியகல்வு பணிப்பாளர் நாயகம் சூலானந்த பெரேரா ஆகியோரும் கலந்துகொண்டனர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’