வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

திங்கள், 11 ஜூன், 2012

இலங்கை தொடர்பான அமெரிக்காவின் நீண்டகால கொள்கையை சிஸன் மீளவலியுறுத்தினார்: அமெரிக்கா



லங்கைக்கான அமெரிக்க தூதுவராக நியமனம் பெறவுள்ள மிச்சேல் ஜே.சிஸன் அண்மையில் அமெரிக்க காங்கிரஸ் முன்னிலையில் இலங்கை பற்றி விளக்கமளித்தமை தொடர்பில் கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகம் இன்று திங்கட்கிழமை தெளிவுபடுத்தியுள்ளது.
இது தொடர்பில் தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது: "தூதுவராக பிரேரிக்கப்பட்டுள்ள மிச்சேல் ஜே.சிஸன், அவரது நியமனத்தை உறுதி செய்வதன் ஒரு பகுதியாக கடந்த ஜுன் 6ஆம் திகதி செனட்டின் வெளியுறவுக் குழு முன்னிலையில் சாட்சியமளித்தார். வடக்கில் இராணுவ குறைப்பு, மாகாண சபை தேர்தல், மனித உரிமை பிரச்சினைகளை கையள்வதற்கான பொறிமுறை உட்படஇலங்கை பற்றிய அமெரிக்காவின் நீண்ட கால கொள்கையை அவருடைய கூற்று மீள வலியுறுத்தியது. கடந்த மாதம் வாஷிஙகடனில் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் அமெரிக்க இராஜாங்க செயலாளர் ஹிலாரி கிளின்டனை சந்தித்த போது பேசப்பட்ட விடயங்களையும் அவரது கூற்று பிரதிபலிக்கின்றது. அத்துடன் அமெரிக்காவிற்கும் இலங்கைக்கும் இடையிலான விரிவான கூட்டு செயற்பட்டுக்கான அவசியத்தையும் தனது அறிக்கையில் அவர் குறிப்பிட்டிருந்தார்".

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’