வ வுனியா ரெக்லமேசன் விளையாட்டுக்கழக உறுப்பினர்கள் நேற்றைய தினம் (9) பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களை வவுனியாவில் வைத்து சந்தித்து கலந்துரையாடினர். (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)
இச்சந்திப்பின் போது தமது விளையாட்டுக் கழகம் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகள் தொடர்பில் அமைச்சர் அவர்களிடம் விளக்கிக் கூறிய விளையாட்டுக் கழக உறுப்பினர்கள் ஏற்கனவே தமது விளையாட்டுக் கழகத்திற்கு வழங்கிய உதிரிகளுக்காக தமது நன்றியையும் அமைச்சர் அவர்களுக்கு தெரிவித்துக் கொண்டனர். இவர்களது பிரச்சினைகள் தொடர்பில் உடனடி நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் அவற்றை வெகுவிரைவில் தீர்ப்பதாக உறுதியளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. மேற்படி விளையாட்டுக் கழகத்தில் அரச அதிகாரிகள் மாத்திரம் அங்கம் வகிப்பது குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’