வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

செவ்வாய், 12 ஜூன், 2012

வவுனியா கைத்தொழிற் பேட்டை தொடர்பில் கலந்துரையாடல்


பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சின் கீழுள்ள கைத்தொழில் அபிவிருத்திச் சபையின் கீழ் இயங்கி வரும் வவுனியா கைத்தொழிற்பேட்டைக்கு நேற்றையதினம் (9) விஜயம் செய்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் அங்குள்ள தொழில் முயற்சியாளர்களது பிரச்சினைகள் தொடர்பாக ஆராய்ந்தார். (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)
கடந்தகால அசாதாரண சூழல் காரணமாக ஒழுங்குற கவனிப்புபெறாத நிலையில் இருந்த இக் கைத்தொழிற் பேட்டைக்கு விசேட வசதி வாய்ப்புக்களை வழங்குவதற்கு அமைச்சர் அவர்கள் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கதாகும். இந்த நிலையில் இக் கைத்தொழிற் பேட்டையில் ஆரம்பத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள தொழில் முயற்சியாளர்களது பெயர், விபரங்கள் அவர்கள் பதிவு செய்த தொழிற்துறைகள் தற்போது அந்தந்த தொழில் நிலையங்களில் இருக்கின்ற நபர்கள் தொடர்பான பெயர் விபரங்கள் அவர்கள் மேற்கொள்கின்ற தொழில் முயற்சிகள் என்பவை தொடர்பில் விரிவான விபரங்களைத் திரட்டுமாறு கைத்தொழில் அபிவிருத்திச் சபையின் அதிகாரிகளுக்கு அமைச்சர் அவர்கள் பணிப்புரை வழங்கினார். கடந்தகால அசாதாரண சூழ்நிலை காரணமாக இக் கைத்தொழிற் பேட்டையை கைத்தொழில் அபிவிருத்திச் சபையானது ஓழுங்கான வகையில் பராமரிக்கத் தவறியதை சுட்டிக்காட்டிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் இலங்கையில் இவ்வாறான கைத்தொழிற் பேட்டைகள் பல இருப்பதை உணர்த்தியதுடன் சிறுகைத்தொழில் முயற்சியாளர்களுக்கு தங்களது தொழில் முயற்சிகளை மேற்கொள்ள உரிய வசதி வாய்ப்புகளை உருவாக்கிக் கொடுப்பதே தமது நோக்கம் என்றும் தெரிவித்தார். கைத்தொழிற் பேட்டையின் உண்மையான நோக்கத்தைத் தவிர்த்து தவறான வகையில் பயன்படுத்துவோருக்கான வாய்ப்புக்கள் நிறுத்தப்பட வேண்டியதன் அவசியத்தையும் அமைச்சர் அவர்கள் எடுத்து கூறினார். அத்துடன் புதிய தொழில் முயற்சியாளர்களுக்கு இக் கைத்தொழிற் பேட்டையில் இடங்களை ஒதுக்கிக் கொள்ள வாய்ப்புக்களை வழங்க உள்ளதையும் அமைச்சர் அவர்கள் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது. இதன்பிரகாரம் தங்களது தொழில் முயற்சிகளை ஆரம்பிக்க எதிர்பார்ப்பு கொண்டுள்ள புதிய தொழில் முயற்சியாளர்கள் கைத்தொழில் அபிவிருத்திச் சபையுடன் தொடர்பு கொண்டு தங்களுக்கான இடங்களை ஒதுக்கிக் கொள்ள முடியும்.பாபா









0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’