வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

செவ்வாய், 12 ஜூன், 2012

ஈரானிய எண்ணெய் இறக்குமதி தடையிலிருந்து இலங்கை உட்பட 7 நாடுகளுக்கு அமெரிக்கா விலக்களிப்பு



ரானிலிருந்து எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடுகளுக்கு அமெரிக்காவில் விதிக்கப்படும் பொருளாதார தடைகளிலிருந்து இலங்கை உட்பட 7 நாடுகளுக்கு 6 மாத காலத்திற்கு விதிவிலக்கு அளிப்பதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. இலங்கை, இந்தியா, மலேஷியா, தென்கொரியா, தென்னாபிரிக்கா, துருக்கி, தாய்வான் ஆகிய நாடுகளுக்கு இவ்விதிவிலக்கு அளிக்கப்படுவதாவ அமெரிக்க ராஜாங்க செயலாளர் ஹிலாரி கிளின்டன் அறிவித்துள்ளார்.
இந்நாடுகள் அமெரிக்காவின் கோரிக்கைக்கிணங்க ஈரானிலிருந்து இறக்குமதி செய்யப்படும் எண்ணெயின் அளவை கணிசமாக குறைத்துக் கொண்டமையே இதற்கான காரணம். ஏற்கெனவே கடந்த மார்ச் மாதம் 11 நாடுகளுக்கு இவ்வாறு விதிவிலக்கு அளிக்கப்பட்டிருந்தது. அணுவாயுதங்களை ஈரான் பெற்றுக்கொள்வதை தடுப்பதற்கும் சர்வதேச கடப்பாடுகளுக்கிணங்க ஈரான் நடந்துகொள்வதை உறுதிப்படுத்துவதற்குமாக மேற்படி தடை விதிக்கப்பட்டதாக ஹிலாரி கிளின்டன் கூறியுள்ளார். ' சர்வதேச சமூகத்தின் கரிசனைகனை திருப்திப்படுத்துவத்றகு உறதியான நடவடிக்கைகளை மேற்கொள்ளும்வரை அவர்கள் தனிமைப்படுத்தலுக்கும் அழுத்தங்களுக்கும் உள்ளாவர் என்ற தீர்மானகரமான செய்தியை ஈரானின் எண்ணெய் விற்பனையை குறைத்ததன் மூலம், ஈரானிய தலைவர்களுக்கு விடுத்துள்ளோம்' என அவர் தெரிவித்துள்ளார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’