வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

புதன், 13 ஜூன், 2012

நித்யானந்தா நீதிமன்றத்தில் சரண்


டந்த இரண்டு நாட்களாக கர்நாடகப் போலிசாரால் தேடப்பட்டுவந்த சர்ச்சைக்குரிய சாமியார் நித்யானந்தா கர்நாடகாவிலுள்ள ராமநகர மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார்.
நித்யானந்தாவை போலிசார் ரகசிய இடத்தில் பாதுகாப்பாக வைத்துள்ளதாக அவர் தரப்பு வழக்கறிஞர் முத்துமாலை கூறியதாக உள்ளூர் செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர். ஆனால் அவர் போலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் நாளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என்றும் ராமநகர மாவட்ட போலிஸ் அதிகாரி கூறியுள்ளார். கர்நாடகத்தில் உள்ள பிடதி ஆசிரமத்தில் ஜூன் 8ம் தேதி நடந்த செய்தியாளர் சந்திப்பின்போது, செய்தியாளர்கள் சிலருக்கும் நித்யானந்தா ஆதரவாளர்கள் சிலருக்கும் இடையில் ஏற்பட்ட மோதலை அடுத்து இரு தரப்பினரும் போலிசாரிடம் பரஸ்பரம் புகார்களைப் பதிவு செய்தனர். இதுதொடர்பாக , கர்நாடகப் போலிசார் நித்யானந்தா மீது சில வழக்குகளைப் பதிவு செய்திருந்தனர். பிடதி ஆசிரமத்தில் இரண்டு நாட்களாக போலிசார் நடத்திவரும் தேடுதல் நடவடிக்கைளின்போது, சில ஆவணங்களும் பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக கர்நாடக உள்துறை அமைச்சர் அசோக் கூறியுள்ளார். ஆசிரமத்தில் கைப்பற்றப்படும் பொருட்களின் அடிப்படையில் நித்யானந்தா மீது மேலதிக குற்றச்சாட்டுக்களைப் பதிவுசெய்ய வாய்ப்பு இருப்பதாக உள்துறை அமைச்சர் செய்தியாளர்களிடம் சுட்டிக்காட்டியுள்ளார். நித்யானந்தா மீது கொலைமிரட்டல் உள்ளிட்ட சில பிரிவுகளின் கீழ் ராமநகர மாவட்ட நிதிமன்றத்தில் இப்போது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’