வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

சனி, 23 ஜூன், 2012

அமைச்சரின் முயற்சி பாராட்டத்தக்கது! முன்னாள் எம.பி கணகரட்னம்


தொழில் முயற்சிகள் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவாகள் எடுத்து வருகின்ற முயற்சி பாராட்டத்தக்கதுடன் வாழ்வு எழுச்சி போன்ற கைத்தொழில் கண்காட்சி முல்லைத்தீவு மாவட்டத்தில் நடாத்துவது வரவேற்கத் தக்கதாகும் என முன்னாள் தமிழத் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.கணகரட்னம் தெரிவித்தார். (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)
வாழ்வு எழுச்சித் திட்டத்தின் தொழி;நுட்ப கண்காட்சியும் விழிப்புணர்வும் எதிர்வரும் ஜூலை மாதம் 28ம் 29ம் திகதிகளில் முல்லைத்தீவு மாவட்டத்தில் நடைபெறவுள்ளது. இந் நிலையில் அது தொடர்பான ஆரம்ப முன்னேற்பாட்டுக் கூட்டம் இன்றைய தினம் (22) முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற போதே முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மேற்படி கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில் மன்னார் மாவட்டத்தில் வாழ்வு எழுச்சி கண்காட்சி இடம்பெற்றபோது அதில் 9000க்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர். அதே போன்று முல்லைத்தீவு மாவட்டமும் பரந்து விரிந்த மாவட்டமாகும். இம் மாவட்டத்தில் பல்வேறு கைத்தொழில் துறைகள் சிறப்பாக வளர்ச்சி பெற்று பின்னர் பின்னடைந்த நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. எனவே அக் கைத்தொழில்களை மேலும் ஊக்குவித்து விருத்தி செய்வதற்கும் புதிய பல கைத்தொழிற் துறைகளை வளர்த்தெடுப்பதற்கும் இக்கண்காட்சி மிகவும் முக்கியமானதாகும் எனத் தெரிவித்தார். நிகழ்வில் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் திரு.சிவஞானசோதி வாழ்வு எழுச்சித் திட்டத்தின் நோக்கங்களை தெளிவுபடுத்தினார். இத் திட்டத்தின் பணிப்பாளர் திரு.கமகே கண்காட்சி தொடர்பில் தெளிவுபடுத்தியதுடன் இலங்கை கைத்தொழில் அபிவிருத்தி சபையின் பொதுமுகாமையாளர் திருமதி ஜெஸ்மின் மன்னப்பெரும திட்டத்தின் முன்னேற்றங்கள் தொடர்பில் எடுத்து விளக்கினார். முல்லைத்தீவு மாவட்ட செயலாளரும் அரச அதிபருமான திரு வேதநாயகன் தலைமையில் இக் கூட்டம் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.








0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’