நியாயமான காரணம் எதுமின்றி உள்நாட்டில் இடம்பெயர்ந்தோரை மீளக்குடியமர்த்துவதை அரசாங்கம் தாமதித்து வருவதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு இன்று செவ்வாய்க்கிழமை குற்றஞ்சாட்டியுள்ளது.
மிதிவெடிகளை சாட்டாக கொண்டு இந்த மக்களை மீளக்குடியமர அனுமதிக்காது விட முடியாது எனவும் தமிழ் தேசிய கூட்டமைப்பு குறிப்பிட்டுள்ளது. மக்கள் குடியேறவுள்ள இடங்களிலுள்ள மிதிவெடிகளை அகற்ற வேண்டும் என்பதை நாம் மறுக்கவில்லை. ஆனால் மிதிவெடிகளை அகற்றிய பின்னரும் பொதுமக்களை சொந்த இடங்களுக்கு செல்ல அனுமதிக்காமல் இருப்பதை ஏற்க முடியாது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடக பேச்சாளர் சுரேஷ் பிரேமசந்திரன் தெரிவித்தார். கண்ணிவெடிகள் அகற்றப்பட வேண்டிய பகுதிகள் உள்ளன என்பது உண்மையாயினும் அவை பெரும்பாலும் வன்னியில் தான் உள்ளன. ஆனால் யாழ்ப்பாணத்தின் பல பகுதிகளில் எந்தவித காரணமுமின்றி மக்கள் குடியேற அனுமதி மறுக்கப்பட்டு வருகின்றது என அவர் குறிப்பிட்டார். அத்துடன் குடாநாட்டில் சுமார் 8,000 ஏக்கர் காணியை அரசாங்கம் தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது எனவும் சுரேஷ் பிரேமசந்திரன் தெரிவித்தார். எம்மிடமுள்ள தகவல்களின் படி 50,000 வரையிலான உள்நாட்டில் இடம்பெயர்ந்தோரின் காணிகளை இராணுத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. இவ்வளவு காணிகளை இராணுவம் பிடித்து வைப்பதிருப்பதற்கு காரணம் எதுவுமில்லை என அவர் கூறினார். ஒரு வருடத்தினுள் மீள்குடியமர்த்தலை பூரணப்படுத்துவதாக அரசாங்கம் ஐக்கிய நாடுகளுக்கு கூறியது. பின்னர், சில மாதங்களில் பூரணப்படுத்துவதாக பொதுமக்களுக்கு தெரிவித்தனர். ஆனால் அவை எதுவும் இதுவரை நடக்கவில்லை என ஊடக பேச்சாளர் குறிப்பிட்டார். இராணுவம் நிலத்தை கையகப்படுத்தி வைத்திருப்பதற்கு எதிரான ஆர்ப்பாட்டத்தை நிறுத்த பொலிஸார் மேற்கொண்ட நடவடிக்கையை ஆதாரம் காட்டிய பிரமேசந்திரன், அரசாங்கம் எந்த வடிவத்திலான எதிர்ப்பையும் சகிப்பதில்லை. இது ஜனநாயக விரோரதமான செயற்பாடு என்றார்.














0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’