வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

செவ்வாய், 19 ஜூன், 2012

கிழக்கு மாகாண சபை கலைப்புக்கு எதிரான மனுவில் திருத்தங்கள் செய்ய நீதிமன்றம் அனுமதி



கிழக்கு மாகாண சபையை அதன் பதவி காலம் நிறைவடைவதற்கு முன்னர் கலைக்க கூடாது என கோரி தாக்கல் செய்யப்பட்ட ஆணைகோரும் மனுவில் சில மாற்றங்களை செய்ய மேன் முறையீட்டு நீதிமன்றம் இன்று செவ்வாய்க்கிழமை அனுமதியளித்தது. இந்த மனு நீதியரசர்களான எஸ்.ஸ்ரீஸ்கந்தராஜா மற்றும் தீபாலி விஜேசுந்தர ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு எடுக்கப்பட்ட போது மனுதாரர் கே.கே.பீ.ரங்கன அமரசிங்க சார்பில் விடுக்கப்பட்ட கோரிக்கையையடுத்தே, நீதிமன்றம் இந்த அனுமதியை வழங்கியது. இந்த மனு மீதான விசாரணைகள் எதிர்வரும் ஜூலை 11 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த மனுவில் பிரதிவாதிகளாக கிழக்கு மாகாண ஆளுநர் ஓயு;வுபெற்ற ரியர் அட்மிரல் மொஹான் விஜயவிக்ரம, முதமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன், அமைச்சர்களான எம்.எஸ்.உதுமாலெப்பை, டி.நவரத்தினராஜா, விமலவீர திசாநாயக்க மற்றும் எம்.எஸ்சுபைர் ஆகியோர் குறிப்பிடப்பட்டுள்ளனர். சட்டத்தரனி மொஹான் பாலேந்திராவின் நெறிப்படுத்தலுடன் ஜனாதிபதி சட்டத்தரணி கே. கனகா ஈஸ்ரனுடன் சட்டத்தரணிகளான எம்.ஏ.சுமந்திரன், பவாணி பொன்சேகா மற்றும் நிரான் அன்கேடெல் ஆகியோர் மனுதாரர் கே.கே.பீ.ரங்கன அமரசிங்க சார்பில் ஆஜராகியிருந்தனர். இதேவேளை, கிழக்கு முதலமைச்சர் சார்பாக ஜனாதிபதி சட்டத்தரணி பாயிஸ் முஸ்தபாவுடன் சட்டத்தரணி நாமல் ராஜபக்ஷ ஆஜராகினார். பிரதி சொலிஸிட்டர் ஜெனரல் ஜானக டி சில்வா, சிரேஷ்ட அரச சட்டத்தரணி சுமதி ரத்மவர்த்ன மற்றும் அரச சட்டத்தரணி சஞ்சய கொடித்துவக்கு ஆகியோர் கிழக்கு மாகாண ஆளுநர் சார்பாக ஆஜராகினர். மாகாண அமைச்சர்களான சுபைர் சார்பாக பைஸர் முஸ்தபாவும் நவரத்தினராஜா சார்பாக காலிங்க இந்ததிஸ்ஸவும் உதுமாலெப்பை சார்பாக குஷான் டி அல்விஸும் விமலவீர திசாநாயக்க சார்பாக அலி சப்ரியும் ஆஜராகினர். பதவி காலம் நிறைவடைவதற்கு முன்னர் கிழக்கு மாகாண சபை கலைக்க கூடாது என முன்வைக்கப்பட்ட பிரரேணை கடந்த ஏப்ரல் 23ஆம் திகதி இடம்பெற்ற கிழக்கு மாகாண சபை அமர்வில் எந்தவித எதிர்ப்புகளுமின்றி நிறைவேற்றப்பட்டதாக குறித்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’