வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

திங்கள், 4 ஜூன், 2012

காணிகளை இழந்த வடக்கு கிழக்கு மக்கள் தமது காணிகளுக்கு உரிமை கோர புதிய சட்டம் :ஹக்கீம்



டம் பெயர்ந்த மற்றும் போரினால் காணிகளை இழந்த வடக்கு கிழக்கை சேர்ந்தவர்கள் தமது காணிகளுக்கு உரிமை கோர புதிய சட்டம் ஒன்று நடைமுறைக்கு வரவுள்ளதாக நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
இதன்படி எவ்வித பிரச்சினைகளும் இன்றி சுமார் 10 வருடங்களாக வேறு ஒருவரின் காணியில் குடியிருப்போருக்கு அந்தக் காணியை உரிமை கோர முடியும் என்ற சரத்து நீக்கப்படும். 30 வருட போர் காரணமாக வடக்கு கிழக்கில் இடம் பெயர்ந்தவர்களின் காணிகளில் மாற்றார் குடியேறியுள்ளனர். இதன்படி வீடுகள் காணிகள் என்பவற்றையும் அவர்கள் தமது உரிமையாக்கியுள்ளனர். இதனை நீக்கி போரினால் இடம் பெயர்ந்தவர்கள் பலாத் காரமாக வெளியேற்றப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கும் வகையில் புதிய சட்டம் இருக்கும் என்று ரவூப் ஹக்கீம் குறிப்பிட்டுள்ளார். இதற்கான சட்ட முன் வரைபுக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இந்த சட்டத்தின் படி 1983 ஆம் ஆண்டு மே முதலாம் திகதி முதல் 2012 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் திகதி வரையிலான பகுதியில் காணிகளை இழந்தவர்கள் இடம் பெயர்ந்தோர் அல்லது பாதிக்கப்பட்டோர் என்ற வகுதிக்குள் உள்ளடக்கப்படவுள்ளனர் என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’