இலங்கையை கைப்பற்றுவதற்கு அமெரிக்கா முயற்சிக்கிறது எனவும் இந்த இலக்கை அடைவதற்காக பிரிவினைவாதிகளுடன் அது சேர்ந்திருப்பதாகவும் அமைச்சர் விமல் வீரவன்ஸ கூறியுள்ளார்.
'இலங்கையின் பூகோள அமைவிடமும் அதன் இயற்கை வளங்களும் அமெரிக்க நலன்களுக்கு முக்கியமானவை, இதனால் நாட்டை சீர்குலைக்க முனையும் பிரிவினைவாத அமைப்புகளை அமெரிக்கா சார்ந்திருந்து நாட்டை கைப்பற்ற முயற்சிக்கிறது' என அவர் கூறினார். மாரவிலவில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். வடக்கிலிருந்து இராணுவத்தை அகற்ற வேண்டுமென்ற அமெரிக்காவினதும் ஏனைய சக்திகளினதும் தொடர்ச்சியான வலியுறுத்தல்களுக்கு இதுவே காரணம் என அமைச்சர் வீரவன்ஸ தெரிவித்தார். 'இதனால்தான் அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் த.தே.கூட்டமைப்பு என்பன வடக்கிலிருந்து இராணுவத்தை அகற்ற வேண்டும் என கோருகின்றன. வடக்கில் பிரிவினைவாதத்தை மீண்டும் விதைத் நாட்டில் ஸ்திரமின்மையை ஏற்படுத்துவதற்கு அது உதவலாம்' என அவர் கூறினார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’