வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

புதன், 9 மே, 2012

என் பந்துவீச்சுப் பாணியை பிரதி செய்யாதீர்கள்: லசித் மலிங்க



ன்னுடைய தனித்துவமான பந்துவீச்சுப் பாணியை இளைய கிரிக்கெட் வீரர்கள் பிரதி செய்ய முயற்சிக்கக்கூடாது என இலங்கை அணியின் வேகப்பந்துவீச்சாளரும், ஐ.பி.எல். போட்டிகளில் மும்பை இன்டியன்ஸ் அணி சார்பாக பங்குபற்றிவருபவருமான லசித் மலிங்க தெரிவித்துள்ளார்.
தனது ஐ.பி.எல். அனுபவங்கள் மற்றும் ஏனையவை தொடர்பான ஒரு நேர்காணலிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். தன்னுடைய பந்துவீச்சுப் பாணியைப் பிரதி செய்ய வேண்டாமெனவும், ஒவ்வொருவரும் தங்களுக்குரிய தனித்துவமான பந்துவீச்சுப் பாணியைப் பேண வேண்டுமெனவும் தெரிவித்த லசித் மலிங்க, இளைய வீரர்கள் அனைவரும் இன்னுமொரு பந்துவீச்சாளரைப் போல் பந்துவீச முயற்சிக்கக்கூடாது எனவும் தெரிவித்தார். தனது பந்துவீச்சுப் பாணி தனக்கு இயற்கையாகவே கிடைக்கப் பெற்றது எனவும், அதை ஒரு போதும் இன்னுமொருவரைப் பார்த்து பழகிக் கொண்டதில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்தார். ஒவ்வொரு ஐ.பி.எல். தொடரிலும் ஐ.பி.எல். முழுவதற்குமான சிறந்த பந்துவீச்சாளராக எவ்வறு திகழ்கிறீர்கள் எனக் கேட்கப்பட்டமைக்கு, தான் சிறந்த பந்துவீச்சாளர் எனக் கருதவில்லை எனத் தெரிவித்த லசித் மலிங்க, அழுத்தங்களுக்கு மத்தியில் விளையாடுவதை தான் விரும்புவதாகவும் தெரிவித்தார். போட்டியின் ஆரம்பத்தில் பவர் பிளே ஓவர்களிலேயே அல்லது போட்டி முடிவில் வீரர்கள் அடித்தாட முற்படும் போதோ தான் பந்துவீச வேண்டியுள்ளதன் காரணமாக அழுத்தங்களுக்கு மத்தியில் பந்துவீச பழக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். அத்தோடு தான் எப்போதும் விக்கெட்டுக்களைச் சாய்ப்பதைப் பற்றியே எண்ணுவதாகவும் தெரிவித்தார். தற்போது 28 வயதாகும் தான், இன்னமும் 2 அல்லது 3 வருடங்கள் கிரிக்கெட் போட்டிகளில் பங்குபற்ற எதிர்பார்ப்பதாகத் தெரிவித்த லசித் மலிங்க, தனது முழங்கால் உபாதைகளை அடுத்து தான் கடுமையான பயிற்சிகளில் ஈடுபடுவதில்லை எனத் தெரிவித்தார். தன்னைப் பொறுத்தவரை முழுமையான உடற்தகுதி அடைந்தால் தான் நேரடியாகப் போட்டிகளில் பங்குபற்றுவதை விரும்புவதாகத் தெரிவித்த அவர், கடுமையான உடற்பயிற்சிகள் காரணமாக தனது உடல் மீண்டும் காயமடைவதை விரும்புவதில்லை எனவும் தெரிவித்தார். தற்போது மீண்டும் அதிக விக்கெட்டுக்களைக் கைப்பற்றியவருக்கான ஊதா நிறத் தொப்பியைப் பெற்றுள்ள லசித் மலிங்கவிடம் அது தொடர்பாகக் கேட்கப்பட்டமைக்கு, ஊதா நிறத் தொப்பி போன்றவற்றை தனது இலக்காகக் கொள்வதில்லை எனத் தெரிவித்த அவர், அணிக்காக எப்போதும் விக்கெட்டுக்களைச் சாய்ப்பதையே இலக்காகக் கொள்வதாகவும் தெரிவித்தார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’