வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வெள்ளி, 4 மே, 2012

அமைச்சின் கீழான வவுனியா கைத்தொழிற்பேட்டைக்கு அமைச்சர் விஜயம்!


ள்ளூர் உற்பத்தியாளர்களை ஊக்குவிப்பது மட்டுமன்றி அவர்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதுமே கைத்தொழிற்பேட்டையின் நோக்காக இருக்க வேண்டுமென பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்துள்ளார். (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)
வவுனியா பூந்தோட்டம் பகுதியில் அமைந்துள்ள பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சின் கீழான இலங்கை கைத்தொழில் அபிவிருத்திச் சபையின் கைத்தொழிற்பேட்டைக்கு இன்றைய தினம் விஜயம் மேற்கொண்டு பேட்டையின் கீழான பல்வேறு தொழிற்துறை சார்ந்தவர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில் தொழிற்துறை நிறுவனங்களில் கடைப்பிடிக்கப்பட வேண்டிய நடைமுறைகள் அறிவுறுத்தல்களுக்கமையவே செயற்திட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும். இவ்வாறான நிறுவனங்கள் ஊடாக உள்ளூர் உற்பத்தியாளர்கள் ஊக்குவிக்கப்படுவதுடன், அவர்களது வாழ்வாதாரமும் மேம்படக் கூடியதாக இருக்கும் என்பதுடன் அதுவே கைத்தொழிற்பேட்டையின் நோக்காகவும் இருக்க வேண்டுமென்றும் சுட்டிக் காட்டினார். அத்துடன் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற அபிவிருத்தி நடவடிக்கைகளின் போது இருந்து வருகின்ற அரசினது கட்டுப்பாடுகளை அமைச்சரவைப் பத்திரன் மூலம் நீக்குவது தொடர்பில் கவனம் செலுத்தப்படும். இதனிடையே தொழிற்சாலைகளினது சுத்தம் சுகாதாரம் தொடர்பிலும் ஒவ்வொருவரும் அதிக கவனம் எடுக்க வேண்டும். அதன் மூலமே அந்தந்த நிறுவனங்களது அழகும் பாதுகாப்பும் உறுதி செய்யப்படும் என்பதுடன் அவற்றின் மூலம் சிறந்த உற்பத்திகளையும் பெற முடியும் என்று தெரிவித்த அமைச்சர் அவர்கள் உள்ளூர் உற்பத்தியாளர்கள் எதிர்நோக்கி வருகின்ற பல்வேறு இடர்பாடுகள் தொடர்பில் கேட்டறிந்ததுடன் அவற்றுக்கு துறைசார்ந்த அதிகாரிகள் ஊடாக உரிய வகையில் தீர்வு காணப்படுமெனவும் உறுதிமொழி வழங்கினார். அத்துடன் தொழில் நிறுவனங்களை சிறந்த உற்பத்தி நிலையங்களாக மாற்றியமைத்து அதனூடாக அதுசார்ந்த குடும்பங்களினது பொருளாதாரத்தையும் வாழ்வாதாரத்தையும் மேம்படுத்துவதற்கு எல்லோரும் ஒன்றிணைந்து உழைக்க வேண்டுமெனத் தெரிவித்ததுடன் தொழிலாளர்களின் பிரச்சினைகளையும் அமைச்சர் அவர்கள் கேட்டறிந்து கொண்டார். இதன்போது பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் சிவஞானசோதி கைத்தொழில் அபிவிருத்தி சபையின் பொதுமுகாமையாளர் ஜஸ்மின் மன்னப்பெருமன ஈ.பி.டி.பி.யின் வவுனியா மாவட்ட அமைப்பாளர் ரகு ஆகியோர் உடனிருந்தனர்.




















0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’