வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

சனி, 5 மே, 2012

கப்ரால் ஏவுகணை மீண்டும் தாக்குகிறது: ரணில்



மையல் வாயு மற்றும் பால்மா விலை அதிகரிப்புடன் கப்ரால் ஏவுகணை மீண்டும் தாக்கத் தொடங்கியுள்ளது என ஐ.தே.க. தலைவர் ரணில் விக்கிரமசிங்க கூறியுள்ளார். 'பால்மா விலை இன்று அதிகரித்துள்ளது. காஸ் விலை இன்று அதிகரித்துள்ளது. இந்த ஏவுகணை எங்கே தாக்கும் என யாருக்குத் தெரியும்?' என ரணில் விக்கிரமசிங்க கேள்வி எழுப்பினார்.
பொருட்களின் விலை உயர்வுக்கு சமாந்தரமாக மக்களின் சம்பளம் அதிகரிக்கப்படவில்லை என அவர் கூறினார். தோட்டத் தொழிலாளர்கள், விவசாயிகள், மீனவர்கள், தொழிலாளர்கள் உட்பட மக்களுக்கு அவசர நிவாரணங்கள் வழங்கப்பட வேண்டும். அவர்களின் தேவைகளை அரசாங்கம் கருத்திற்கொள்ள வேண்டும். இந்த தேவைகள் நிறைவேற்றப்பட வேண்டுமென காட்டாட்சியினருக்கு நினைவுபடுத்துகிறோம்' என அவர் கூறினார். சம்பள உயர்வுடன் தேசிய ஐக்கியமும் தேசிய பிரச்சினைக்கான அரசியல் தீர்வும் அவசியம். நாட்டின் சார்பான தீர்மானங்களை மேற்கொள்வதில் மக்களுக்கு சமத்துவமான பங்கு அவசியம் எனவும் ரணில் கூறினார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’