பாதுகாப்புக் காரணங்களை முன்னிட்டு முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவை நவலோகா வைத்தியசாலையிலிருந்து கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றுமாறு சிறைச்சாலை அதிகாரிகளுக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
நவலோகா வைத்தியசாலையிலுள்ள சரத் பொன்சேகாவுக்கு போதியளவான பாதுகாப்பை வழங்க முடியாதுள்ளதாகவும் இவர் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டால் போதியளவான பாதுகாப்பை வழங்கமுடியுமென சிறைச்சாலை அதிகாரிகள் விடுத்த வேண்டுகோளையடுத்து, இந்த உத்தரவு பிறக்கப்பட்டுள்ளது. சிறைச்சாலை அதிகாரிகளின் வேண்டுகோளை கவனத்தில் எடுத்த நீதிபதி, சரத் பொன்சேகாவை கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றுவதற்கான அனுமதியை வழங்கினார். சில நாட்களுக்கு முன்னர் ஆஸ்துமா நோயால் சரத் பொன்சேகா வருந்திக்கொண்டிருப்பதாக வைத்திய அறிக்கைகளையும் சிபாரிசுகளையும் நீதிமன்றத்தில் சரத் பொன்சேகா சார்பான சட்டத்தரணிகள் சமர்ப்பித்திருந்ததைத் தொடர்ந்து அவரை வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சை பெற அனுமதிக்க வேண்டுமென நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து சரத் பொன்சேகா கடந்த சனிக்கிழமை நவலோகா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’