வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

திங்கள், 7 மே, 2012

தென்னைச் செய்கையின் அவசியம் குறித்து அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஜப்பானிய பிரதிப் பிரதமருக்கு விளக்கம்!


தென்னைப் பயிர்ச் செய்கையின் முக்கியத்தும் அதனால் ஏற்படக் கூடிய பயன்பாடுகள் மற்றும் அதனது அபிவிருத்தி தொடர்பாக பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் ஜப்பானிய பிரதிப் பிரதமர் கட்சுயா ஒகாடாவுக்கு எடுத்து விளக்கியுள்ளார். (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)
யாழ்ப்பாணத்திற்கு இன்றைய தினம் விஜயம் மேற்கொண்ட ஜப்பானிய பிரதிப் பிரதமர் உள்ளடங்கிய குழுவினர் அச்சுவேலியில் அமையப் பெற்றுள்ள தென்னை நாற்று மேடையை பார்வையிட்ட போதே அமைச்சர் அவர்கள் குறித்த விடயம் தொடர்பில் தெளிவுபடுத்தியுள்ளார். முன்பதாக ஜப்பானிய பிரதிப் பிரதமர் உள்ளிட்ட ஜப்பானிய குழுவினருடன் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் உள்ளடக்கியோரை தென்னை அபிவிருத்தி மற்றும் மக்கள் தோட்ட அபிவிருத்தி அமைச்சர் ஜகத் புஸ்பகுமார ஈ.பி.டி.பி. பாராளுமன்ற உறுப்பினர் சில்வேஸ்திரி அலென்ரின் (உதயன்) மாவட்ட அரச அதிபர் ஆகியோர் பிரதான வாயிலில் வரவேற்றனர். தொடர்ந்து பாடசாலை மாணவிகளினது இசை அணி வகுப்பு மற்றும் மங்கள வார்த்தியம் சகிதம் தென்னை நாற்று மேடைக்கு விருந்தினர்கள் அழைத்து வரப்பட்டனர். அங்கு நடுகைக்கு தயார் நிலையிலுள்ள தென்னங் கன்றுகளையும் நாற்றுத் தேங்காய்களையும் அதிதிகள் பார்வையிட்டதுடன் துறைசார்ந்தோரிடம் இது தொடர்பில் கேட்டறிந்து கொண்டனர். இதன்போது வடபகுதியில் கடந்த கால யுத்தத்தினால் பெருமளவு தென்னைகள் அழிக்கப்பட்டதையும் இதன் பொருட்டு தென்னஞ் செய்கை மேற்கொள்ளப்பட வேண்டியதன் அவசியம் குறித்தும் எடுத்து விளக்கிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தென்னை மரத்திலிருந்து பெறக் கூடிய உற்பத்திகள் தொடர்பிலும் விரிவாக விளக்கியதுடன் இது தொடர்பில் நிதியுதவி வழங்கிய ஜப்பானிய அரசுக்கு எமது மக்கள் சார்பில் தனது நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டார். அத்துடன் ஜப்பானின் ஜெய்க்கா நிறுவனத்தினால் அச்சுவேலி தென்னைப் பயிர்ச் செய்கை நாற்று மேடை வளாகத்திற்காக 14.6 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பட்ட அலுவலகத்தையும் அதிதிகள் பார்வையிட்டனர். 08 ஏக்கர் விஸ்தீரணம் கொண்ட இந்த நாற்று மேடை வளாகத்தின் ஒவ்வொரு பகுதிகளையும் பார்வையிட்ட ஜப்பானிய குழுவினர் வளாகத்தில் தென்னை மரக்கன்றுகளை நாட்டி வைத்ததுடன் நிகழ்விற்கு வருகை தந்த ஒரு தொகுதியினருக்கு தென்னங்கன்றுகளையும் ஜப்பானிய பிரதிப் பிரதமர் வழங்கினார். இந்நிகழ்வில் ஜப்பானுக்கான இலங்கைத் தூதுவர் அட்மிரல் வசந்த கரன்னகொட ஜப்பானிய மற்றும் இலங்கை நாட்டின் துறைசார்ந்த அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.







































0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’