இந்தோனேஷியாவின் குடிவரவு சிவப்புப் பட்டியலில் இருந்து இலங்கையையும் பங்களாதேஷையும் மே மாத இறுதியில் நீக்குவதற்கு இந்தோனேஷிய சட்ட மற்றும் மனித உரிமைகள் அமைச்சு தீர்மானித்துள்ளது.
முன்னர் திட்டமிடப்பட்டதைவிட நான்கு மாதங்களுக்கு முன்னதாகவே மேற்படி பட்டியலில் இருந்து நீக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இலங்கை, பங்ளாதேஷ் நாடுகள் இப்பட்டியலில் இருந்து விரைவில் நீக்கப்படும். இந்நாடுகளின் பொருளாதார, பாதுகாப்பு விவகாரங்களில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதால் இலங்கை, பங்களாதேஷ் பிரஜைகள் இந்தோனேஷியாவுக்கு வருவதற்கான விஸா கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் என மேற்படி அமைச்சின் பயண ஆவணத்துறை தலைவரான பதி சத்ரியா விபாவா கூறியுள்ளார். பங்களாதேஷ் பிரஜைகள் தெளிவான நோக்கமின்றி இங்கு வருவதற்குப் பதிலாக இந்தோனேஷியாவுக்கு நன்மைகளை கொண்டுவருவார்கள் என நம்பப்படுகிறது எனவும் விபாபா தெரிவித்துள்ளார். இதேவேளை, ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் நாடுகள் இப்பட்டியலில் தொடர்ந்தும் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’