வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

திங்கள், 7 மே, 2012

இலங்கை தமிழர் விவகாரத்தில் இந்தியாவின் பங்கு; ஹிலாரியிடம் விளக்கும் கிருஷ்ணா



லங்கைத் தமிழர் பிரச்சினையில் இந்தியா முன்னெடுத்து வரும் நடவடிக்கைகள் மற்றும் அரசியல் தீர்வு உள்ளிட்ட விடயங்கள் குறித்து அமெரிக்க இராஜாங்க செயலாளர் ஹிலாரி கிளின்டனிடம் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா நாளை செவ்வாய்க்கிழமை விளக்கமளிக்கவுள்ளார் என்று இந்திய வெளிவிவகார அதிகாரிகள் உறுதிசெய்துள்ளனர்.
இந்தியாவுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டுள்ள ஹிலாரி கிளின்டன், நாளைய தினம் புதுடில்லிக்குச் சென்று இந்திய பிரதமர் மன்மோகன்சிங் மற்றும் வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா ஆகியோரைச் சந்தித்து கலந்துரையாடவுள்ளார். இந்நிலையில், எஸ்.எம்.கிருஷ்ணாவுடனான சந்திப்பின் போது இலங்கைத் தமிழர் பிரச்சினை குறித்து முக்கியமாக கலந்துரையாடப்படும் என்று தெரிவிக்கப்படுகின்றது. இலங்கைத் தமிழர் தொடர்பில் இந்தியாவால் முன்னெடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள், அரசியல் தீர்வு குறித்த பிரச்சினை உள்ளிட்டவை தொடர்பில் கிருஷ்ணா இதன்போது விளக்கமளிப்பார் என்று தெரிவிக்கப்படுகின்றது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’