பி ரான்ஸின் புதிய ஜனாதிபதியாக பிரான்சுவா ஹொலண்ட் தெரிவு செய்யப்பட்டுள்ளார். நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலின் இரண்டாவது கட்ட வாக்களிப்பில் பதவியிலுள்ள ஜனாதிபதியான நிக்கலஸ் சார்கோஸியை இடது சாரி வேட்பாளரான பிரான்சுவா ஹொலண்ட் தோற்கடித்தார்.
இதில் பிரான்சுவா ஹொலண்ட்டுக்கு 51.7 சதவீத வாக்குகளும் நிக்கலஸ் சார்கோஸிக்கு 47.3 சதவீத வாக்குகளும் கிடைத்தன. கடந்த மாதம் நடைபெற்ற முதலாவது பிரெஞ்சு ஜனாதிபதித் தேர்தலின் முதல் சுற்று வாக்கெடுப்பில் 10 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். அவர்களில் பிரான்சுவா ஹொலண்ட் 28.6 சதவீத வாக்குகளையும் நிக்கலஸ் சார்கோஸி 27.2 சதவீத வாக்குகளையும் பெற்றனர். எனினும் எந்தவொரு வேட்பாளரும் போதிய பெரும்பான்மை வாக்குகளை பெறத் தவறியதால் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரண்டாவது சுற்று வாக்களிப்பு நடத்தப்பட்டது. கடந்த 17 வருடங்களில் பிரான்ஸில் இடதுசாரி கொள்கையுடைய ஒருவர் ஜனாதிபதியாவது இதுவே முதல் தடவையாகும். பிரான்சுவா ஹொலண்ட் (57) ஜனாதிபதியாக தெரிவானமை யூரோ வலயம் முழுவதிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’