ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் கடந்த மார்ச் மாதம் இலங்கைக்கு எதிரான பிரேரணை நிறைவேற்றப்படுவதில் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம் பிள்ளை வகித்த பங்கு தொடர்பாக இலங்கை அரசாங்கம் உத்தியோகபூர்வமாக தனது ஆட்சேபத்தை பதிவுசெய்யவுள்ளது.
இதற்கான நடவடிக்கையில் ஜெனீவாவிலுள்ள இலங்கையின் நிரந்தர பிரதிநிதியான தமரா குணநாயகம் ஈடுபட்டுள்ளதாக தெரியவருகிறது. ஐ.நா. பொதுச்சபையினாலும் ஐ.நா. சாசனத்தினாலும் தனக்கு வழங்கப்பட்ட ஆணையை நவநீதம் பிள்ளையை மீறியுள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. இதனால் நவநீதம் பிள்ளைக்கு எதிரான ஆட்சேபத்தை கடிதம் மூலம் அவருக்கு தெரிவிக்கவுள்ளதாக அவ்வட்டாரங்கள் தெரிவித்தன. இலங்கைக்கு எதிரான பிரேரணையை நிறைவேற்றுவதில் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையானது ஐ.நா. சாசனத்தை மீறியுள்ளதாக சீனா, ரஷ்யா, கியூபா முதலான நாடுகள் கூறியிருந்தன. அமெரிக்கா முன்வைத்த மேற்படி பிரேரணை தொடர்பாக ஐ.நா. மனித உரிமைகள் பேரவையானது கடந்த மார்ச் 23 ஆம் திகதி வாக்கெடுப்பு நடந்தபோது பிரேரணைக்கு ஆதரவாக 24 வாக்குகளும் எதிராக 15 வாக்குகளும் கிடைத்தன. 8 நாடுகள் வாக்களிப்பில் கலந்துகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.














0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’