க டமைக்கு சமுகமளிக்கவோ அல்லது மன்னிப்பு காலத்தில் முகாம்களில் ஆஜராகவோ தவறிய 29,092 இராணுவ உத்தியோகஸ்தர்களை கைது செய்வதற்கான விசாரணைகளை ஆரம்பமாகியுள்ளதாக இராணுவப் பேச்சாளர் ருவன் வணிகசூரிய தெரிவித்தார்.
இராணுவத்தைவிட்டு தப்பியோடிய 36,308 பேர் இவ்வருடம் மார்ச் 31 ஆம் திகதி வரையான மூன்றுவருட காலத்தில் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். 'சேவையிலிருந்து ஓய்வு பெறுவதற்கு அவர்கள் விரும்பினால் சரணடையலாம். ஆனால் பெரும்பாலான நேரங்களில், நாம் பொலிஸ் அறிக்கைகளைப் பெற்று, அவர்கள் ஏதேனும் சட்ட நடவடிக்கைளில் ஈடுபட்டுள்ளார்களா என ஆராய்கிறோம். குற்றச்சாட்டுகள் நிரூபணமானால் அவர்களுக்கு எதிராக பொலிஸாரின் உதவியுடன் சட்டநடவடிக்கை மேற்கொள்கிறோம்' என அவர் தெரிவித்தார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’