வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

செவ்வாய், 8 மே, 2012

உலகிற்கு நற்செய்தியொன்றை சம்பந்தன் வழங்கியுள்ளார் : திஸ்ஸவிதாரண



மிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் நற்செய்தியொன்றை நாட்டிற்கும் உலகிற்கும் வழங்கியுள்ளார். எனவே, இச்சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்டு தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காண நிபந்தனையற்ற பேச்சுக்களை அரசாங்கம் கூட்டமைப்புடன் முன்னெடுப்பதே சிறந்தது என்று அமைச்சர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண தெரிவித்தார்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஒரு போதும் தீர்வுத் திட்ட ஒப்பந்தங்களில் கூட்டமைப்புடன் கைச்சாத்திடமாட்டார். ஏனென்றால் பெரும்பான்மை இன மக்களின் ஆதரவுகளை இழக்க நேரிடும் என்ற அச்சமே பிரதான காரணமாகும். இதனை தாம் சம்பந்தன் எம்.பி.யிடம் விளக்கியதாகவும் அவர் குறிப்பிட்டார். இது தொடர்பாக அமைச்சர் திஸ்ஸ விதாரண தொடர்ந்தும் கூறுகையில், இனப் பிரச்சினைக்கான தீர்வுத் திட்டம் என்பது முக்கியமானதொரு விடயமாகும். சகல கட்சிகளும் காலம் கடத்தாது ஒன்றிணைந்து செயற்படுவதனால் மாத்திரமே நிலையான தீர்வுத் திட்டத்தை பெற்றுக் கொள்ள முடியும். அண்மையில் யாழ். மேதினக் கூட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் சிறந்த செய்தியொன்றை வெளிப்படுத்தியிருந்தார். அதாவது பிரிவினைவாதத்தை புறம் தள்ளி விட்டு, ஐக்கிய இலங்கைக்குள் தீர்வை ஏற்படுத்துவதே ஆகும். இந்த செய்தியினை அரசாங்கம் உட்பட அனைத்து தரப்புகளும் புரிந்துகொள்ள வேண்டும். தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வுத் திட்டத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனித்து செயற்படமாட்டார். ஆரம்பக் காலங்களில் பண்டா செல்வா மற்றும் டட்லி செல்வா போன்ற ஒப்பந்தங்களின் மூலம் அச் சிங்கள தலைவர்கள் பெரும்பான்மை இன மக்களின் ஆதரவுகளை இழந்தனர். இந்நிலை தனக்கு ஏற்படக் கூடாது என்பதில் தற்போதைய ஜனாதிபதியும் உள்ளார் என்பதே உண்மை. இது தொடர்பில் சம்பந்தன் எம்.பி.யிடம் பல முறை கூறியுள்ளேன். எனவே, பாராளுமன்ற தெரிவுக் குழுவை அரசியல் தீர்விற்கான களமாக பயன்படுத்திக் கொள்வதே சிறந்தது. இதில் அனைத்து தரப்புகளும் உள்வாங்கப்படுவதால் விமர்சனங்கள் ஏற்பட வாய்ப்பில்லை. எவ்வாறாயினும் அரசாங்கம் கூட்டமைப்பை தெரிவுக் குழுவிற்குள் கொண்டு வர முயற்சிக்க வேண்டும். இதற்கான நம்பகத்தன்மையை ஏற்படுத்த வேண்டும் என்றார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’