வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வியாழன், 17 மே, 2012

வாழ்வெழுச்சித் திட்டம் தொடர்பிலான கலந்துரையாடல்



நாடளாவிய ரீதியில் வாழ்வெழுச்சித் திட்டம் தொடர்பிலான முன்னேற்றங்களைக் கண்டறியும் கலந்துரையாடலொன்று பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தலைமையில் நடைபெற்றது. (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)
கொழும்பு மருதானையிலுள்ள அமைச்சின் கேட்போர் கூடத்தில் இன்றைய தினம் இக்கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது. திவிநெகும எனப்படும் வாழ்வெழுச்சித் திட்டத்தினூடாக சிறிய மற்றும் நடுத்தர குடிசைக் கைத்தொழில்த் துறையை ஊக்குவித்து மேம்படுத்துவது தொடர்பில் நாட்டின் பதின்மூன்று மாவட்டங்களில் இதுவரையில் கண்காட்சிகள் நடாத்தப்பட்டுள்ளன. அதன் பிரகாரம் நடாத்தப்பட்ட கண்காட்சிகளினூடாக தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு அவர்களது தேவைகளின் அடிப்படையில் தொழில்நுட்ப உதவிகள் மூலப்பொருட்கள் கிடைக்கப் பெற்றமை மற்றும் அவற்றை அவர்கள் எவ்வாறு பயன்படுத்துகின்றனர் என்பது தொடர்பிலும் விரிவாக ஆராயப்பட்டது. இவ்வாறான வாழ்வெழுச்சித் திட்டத்திற்கு அந்தந்த மாவட்ட அரச அதிபர்கள் உள்ளிட்ட அரச திணைக்கள அதிகாரிகள் வழங்கிவருகின்ற ஒத்துழைப்புக்கள் ஒத்தாசைகள் பங்களிப்புகள் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டது. முப்பது ஆயிரம் நிலைத்து நிற்கக்கூடிய குடிசைக் கைத்தொழில்களை அபிவிருத்தி செய்யும் நோக்கில் இவ்வருடம் பத்தாயிரம் குடிசைக் கைத்தொழில்த் துறைகளை இலக்கு வைத்து வாழ்வெழுச்சித் திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இதன்போது பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சிற்கு கீழான நிறுவனங்கள் உள்ளிட்ட பதினாறு நிறுவனங்களினது செயற்றிட்டங்கள் தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டது. இதில் சிரேஸ்ட அமைச்சர் ஏ.எச்.எம்.பௌசி பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் சிவஞானசோதி திட்டப்பணிப்பாளர் கமகே ஆகியோர் உடனிருந்தனர்.
















0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’