வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வெள்ளி, 18 மே, 2012

முன்னாள் சட்ட மா அதிபருக்கு நீதிமன்றம் அழைப்பாணை



டகவியலாளர் பிரகீத் எக்நெலிகொட காணாமல் போனமை பற்றிய விசாரணைக்காக நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு முன்னாள் சட்ட மா அதிபர் மொஹான் பீரிஸுக்கு ஹோமகம நீதவான் அழைப்பாணை விடுத்துள்ளார்.
ஐக்கிய நாடுகளின் சித்திரவதைக்கான குழுவில் பிரகீத் எக்நெலிகொட அரசியல் தஞ்சம் பெற்று வெளிநாட்டில் வாழ்வதாகவும் அவர் காணாமல் போகவில்லையென்றும் கூறியமை தொடர்பாக முன்னாள் சட்ட மா அதிபருக்கு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது. கேலிச் சித்திரம் வரைபவரும்; பத்தியெழுத்தாளருமான பிரகீத் எக்நெலிகொட கடந்த 2010ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 24ஆம் திகதி காணாமல் போயிருந்தார். சரத் பொன்சேகா மற்றும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் போட்டியிட்ட ஜனாதிபதித் தேர்தல் நடைபெறுவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னராக பிரகீத் எக்நெலிகொட காணாமல் போயிருந்தார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’