போ ர்க்குற்றச்சாட்டுகள் தொடர்பான எந்த சர்வதேச விசாரணைக்கும் இலங்கை ஒத்துழைக்க வேண்டும் என முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா இன்று கூறியுள்ளார். சிறையிலிருந்து நேற்றுவிடுதலையான நிலையில் பிபிசியிடம் அவர் இக்கருத்தை தெரிவித்துள்ளார்.
இலங்கையர்கள் சிலர், போர் நடத்தப்பட்டமை தொடர்பில் குற்றவாளிகளைப் போல் தமது முகங்களை மறைத்துக்கொள்ள முயற்சிக்கின்றனர் என அவர் கூறியுள்ளார். எனினும், யுத்தத்தின்போது ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டனர் என்ற குற்றச்சாட்டை அவர் நிராகரித்தார். "30,000 அல்லது 40,000 பேர் இறந்தனர் என்பது நடைமுறை சாத்தியமல்ல. யுத்தத்தை நாம் நடத்திய விதம், நாம் பாவித்த ஆயுதங்களின் வகை, நாம் பயன்படுத்திய கையேடுகள் எல்லாவற்றிலும் பொதுமக்களின் பாதுகாப்பு குறித்து நாம் கரிசனை செலுத்தினோம்" என அவர் தெரிவித்தார். இலங்கைத் தலைவர்கள் சிலர் தாம் சிலவிடயங்களில் குற்றவாளிகள் என்பதைப்போன்ற அபிப்பிராயத்தை உலகிற்கு கொடுக்கின்றனர் என பொன்சேகா கூறினார். எனினும் யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்தமைக்கு அரசியல் தலைமைத்துவம் அல்லாமல் தானே பொறுப்பாக இருந்தாகவும் யுத்தம் முடித்தமை குறித்த கேள்விகளை எதிர்கொள்வதற்கு எவரின் முன்னாலும் சமுகமளிக்கத் தயார் எனவும் பொன்சேகா கூறினார். தான் ஜனாதிபதியாகவோ நாடாளுமன்ற உறுப்பினராகவோ தெரிவு செய்யப்படாவிட்டாலும் நாட்டின் ஊழல் அரசியல் கலாசாரத்தை மாற்றவதற்காக தான் அரசியலில் ஈடுபடவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’