வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

செவ்வாய், 22 மே, 2012

புலிகளை தோற்கடித்தது எவ்வாறு இந்திய மாணவர்களுக்கு பாலசூரிய



லங்கையில் முப்பதாண்டு காலம் போரை நடத்திய விடுதலைப் புலிகளைத் தோற்கடித்தது எவ்வாறு என்பதனை இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் உள்ள பல்கலைக்கழக மாணவர்களுக்கு முன்னாள் பொலிஸ் மா அதிபர் மஹிந்த பாலசூரிய விளக்கமளித்துள்ளார். வடோதராவில் உள்ள மகாராஜா சஜா ஜிராவ் பல்கலைக்கழகத்தின் அரசியல் விஞ்ஞானத்துறை மாணவர்களுக்கே முன்னாள் பொலிஸ் மா அதிபர் மஹிந்த பாலசூரிய, இந்தப் பாடத்தை நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மாணவர்களுக்கு இவர் தீவிரவாத முறியடிப்பு மற்றும் அனைத்து விவகாரங்கள் குறித்து ஒன்று அல்லது இரண்டு பாடங்களை கற்பிக்கவுள்ளார். இதன்போது விடுதலைப் புலிகளைத் தோற்கடித்த தனது அனுபவங்கள் குறித்தே அவர் முக்கியம கவனம் செலுத்துவார். மஹிந்த பாலசூரிய இந்தப் பல்கலைக்கழகத்தில் 1976 ஆம் ஆண்டில் விஞ்ஞான மாணிப் பட்டத்தைப் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. அத்துடன் ரஷ்யாவின் சென். பீற்றர்ஸ் பேர்க் பல்கலைக்கழகத்தில் அரசியல் விஞ்ஞõன பீடத்தில் கலாநிதிப் பட்டத்தையும் இவர் பெற்றுள்ளார். கலாநிதிப் பட்டத்துக்காக தான் எழுதிய ஆய்வுக்கட்டுரையை அடிப்படையாக வைத்து மஹிந்த பாலசூரிய விடுதலைப் புலிகளின் எழுச்சியும் வீழ்ச்சியும் என்ற தலைப்பில் நூல் ஒன்றை எழுதியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’