வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

செவ்வாய், 22 மே, 2012

விடாமுயற்சியினூடாகவே சாதனைகள் படைக்க முடியும் - அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா


ரலாற்றில் முதற்தடவையாக யாழ். மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தி தேசிய ரீதியில் சாதித்த தெல்லிப்பளை யூனியன் கல்லூரி வலைப்பந்தாட்ட அணியினருக்கும் ஏனைய விளையாட்டுப் போட்டிகளில் பங்கெடுத்தோருக்கும் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தமது வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொண்டார். (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)
கொழும்பில் அமைந்துள்ள அமைச்சரின் இல்லத்திற்கு இன்றைய தினம் (20) வருகை தந்திருந்த வீர வீராங்கனைகளைச் சந்தித்த போதே அமைச்சர் அவர்கள் தமது வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்தார். தென்னிலங்கையில் நடைபெற்ற போட்டிகளில் பங்கெடுக்கும் முகமாக யாழ்.மாவட்டத்திலிருந்து விஜயம் மேற்கொண்ட வீர வீராங்கனைகள் பல்வேறு போட்டிகளில் பங்கு பற்றினர். இதன் பிரகாரம் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தால் தேசிய ரீதியில் ஏற்பாடு செய்யப்பட்ட வலைப்பந்தாட்ட போட்டியில் தெல்லிப்பளை யூனியன் கல்லூரி வெற்றி பெற்று வரலாற்றுச் சாதனை படைத்தது. இதற்கு முன்னர் 2005ம் ஆண்டு தேசிய ரீதியில் பாடசாலைகளுக்கிடையே நடாத்தப்பட்ட வலைப்பந்தாட்டப் போட்டியில் 3ம் இடத்தையும் இவ்வாண்டு மார்ச் மாதம் வலைப்பந்தாட்ட சங்கத்தால் நடாத்தப்பட்ட போட்டியில் இரண்டாம் இடத்தையும் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தில் திறந்த மட்டத்தில் தேசிய ரீதியில் நடாத்தப்பட்ட போட்டியில் முதலாம் இடத்தையும் தெல்லிப்பளை யூனியன் கல்லூரி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. தேசிய ரீதியில் 26 அணிகள் பங்குபற்றியிருந்த நிலையில் இன்றைய தினம் தேசிய மகரகம விளையாட்டு அரங்கில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் மகரஹம மாவட்ட அணியுடன் யாழ்.மாவட்ட யூனியன் கல்லூரி அணிமோதியது இதில் 42 இற்கு 32 என்ற புள்ளிகள் அடிப்படையில் வெற்றியை தமதாக்கிக் கொண்டது. இதனிடையே தென்னிலங்கைக்கு விஜயம் செய்த யாழ்.மாவட்டத்தின் வீர வீராங்கனைகளைக் கொண்ட அணிகள் வலைப்பந்தாட்டம் மற்றும் கரப்பந்தாட்டப் போட்டிகளில் பங்கேற்றிருந்தமையும் அதிலும் குறிப்பாக கரவெட்டி இளைஞர் கழக அணி முதன் முறையாக வலைப்பந்து போட்டியில் தேசிய ரீதியில் பங்கெடுத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது. வீர வீராங்கனைகளுடனான சந்திப்பின் போது அமைச்சர் அவர்கள் கருத்துத் தெரிவிக்கும் போது கடந்த கால தவறான தமிழ் அரசியல் தலைமைகளின் வழிநடத்தல் காரணமாகவே யாழ்.மாவட்டத்தினது விளையாட்டுத்துறையும் பின்னோக்கிப் போனது. எனவே நாம் இருக்கின்றதை பாதுகாத்துக் கொண்டு அதிலிருந்து முன்னேற வேண்டும் என்பதுடன் விடாமுயற்சியுடன் வியர்வை சிந்துவதனூடாகவே வெற்றிகளையும், சாதனைகளையும் நிலைநாட்ட முடியும் என்றும் சுட்டிக்காட்டினார்











.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’