இ லங்கை மீது சுமத்தப்பட்டுள்ள போர்க் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் சர்வதேசத்தின் முன் சென்று விளக்கமளிக்க வேண்டிய அவசியம் அரசாங்கத்துக்கு இல்லை. இது தொடர்பில் சர்வதேசம் எமக்கு கடிதம் மூலம் கேள்வி எழுப்பியிருந்தது. அவ்வாறே நாமும் கடிதம் மூலம் பதிலளித்துள்ளோம்' என்று அமைச்சரவையின் பேச்சாளர் பிரதியமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன கூறினார்.
யுத்தக் குற்றங்களில் இலங்கை ஈடுபடவில்லை என்று அரசாங்கம் தொடர்ந்தும் வலியுறுத்தி வருகின்றது. இதனையே முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகாவும் வலியுறுத்தியுள்ளார். அப்பாவிப் பொதுமக்கள் கொல்லப்படவில்லை என்றும் அவர் கூறியுள்ளார். இந்நிலையில், யுத்தக் குற்றச்சாட்டுக்களுக்கான சான்றிதழை சர்வதேசத்திடம் கொடுக்க எவராது முயற்சித்தால் அவர்களின் நோக்கம் தவறானதாகவே இருக்கும் என்றும் பிரதியமைச்சர் யாப்பா மேலும் கூறினார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’