மக்கள் சேவைக்காக தன்னையே அர்ப்பணித்து செயற்பட்டு வருபவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா என சமூக சேவைகள் அமைச்சர் பீலிக்ஸ் பெரேரா தெரிவித்தார். (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)
இன்றைய தினம் (05) கம்பஹா ஏக்கல பகுதியில் வாழ்வெழுச்சித் திட்டத்தினூடாக பயனாளிகளுக்கு கைத்தொழில்கள் சார்ந்த உபகரணங்களை வழங்கும் நிகழ்வில் சிறப்பு அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில் பல தடவைகள் பயங்கரவாதிகளின் கொலைத் தாக்குதல்களிலிருந்து உயிர் தப்பிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் மனிதாபிமானம் மிக்கவர். களுத்துறை சிறைச்சாலையில் அரசியல் கைதிகளாக தடுத்து வைக்கப்பட்டிருந்தவர்களைப் பார்க்கச் சென்ற போதும் பலத்த தாக்குதலுக்கு உள்ளானார். ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவர்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மீது மிகுந்த அன்பு வைத்திருப்பவர். வடபகுதியிலே எவருமே இல்லாத ஒரு காலத்தில் ஜனாதிபதி அவர்களுக்கு பக்கபலமாக நின்றவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் அதுமட்டுமல்லாது வடபகுதியிலே எமது ஜனாதிபதிக்கு பாரியதொரு வரவேற்பை உண்டு பண்ணியவர். சர்வதேச நாடுகளுக்குச் சென்று ஜனாதிபதி அவர்களுக்கு பக்கபலம் சேர்த்தவர் என்றும் அமைச்சர் பீலிக்ஸ் பெரேரா தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’