திருகோணமலையில் தமது தளமொன்றை நிறுவுவதற்காக யுத்தத்தை நீடிக்கவும் தீவிரப்படுத்துவதற்குமான அமெரிக்காவின் முயற்சிப்பது குறித்து இந்திய சஞ்சிகையொன்றுக்கு வழங்கிய செவ்வியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் எச்சரித்திருந்ததாக மின் சக்தி வலுசக்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க இன்று கூறியுள்ளார்.
பிலியந்தலையில் இன்று வியாழக்கிழமை நடைபெற்ற கூட்டமொன்றில் உரையாற்றிய அமைச்சர் சம்பிக்க ரணவக்க, 23.03.1986 ஆம் திகதி இந்தியாவின் த வீக் சஞ்சிகையில் வெளியான பிரபாகரனின் செவ்வியின் ஒரு பகுதியை வாசித்துக் காட்டினார். "அமெரிக்காவின் நோக்கமானது இனப்பிரச்சினையை நிலைத்திருக்கவும் தீவிரப்படுத்தவும் செய்வதாகவும். இதன் மூலம் அது இத்தீவில் கால்பதிக்கவும் தனது தளமொன்றை திருகோணமலையில் நிறுவவும் முடியும். அமெரிக்க நிர்வாகமானது இப்பிராந்தியத்தில் தந்திரோபாய மற்றும் பூகோள நலன்களைக் கொண்டுள்ளது. திருகோணமலையில் இயற்கைத் துறைமுகத்தை கொண்டுள்ள இலங்கையானது கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில் அமைந்துள்ளது.... அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் நோக்கமானது படிப்படியாக இந்நாட்டில் ஊடுருவி, அதை தனது ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வருவதாகும்' என பிரபாகரன் அச்செவ்வியில் தெரிவித்துள்ளார். அவுஸ்திரேலியாவின் டார்வின் நகரில் அமெரிக்க படையினர் அண்மையில் தரையிறக்கப்பட்டமையானது ஆசிய – பசுபிக்கில் அமெரிக்க விஸ்தரிப்புக் கொள்கையின் பெரும்பங்காகும் என அமைச்சர் சம்பிக்க ரணவக்க கூறினார். அப்பகுதியில் அமெரிக்க துருப்பினரின் எண்ணிக்கை எதிர்வரும் மாதங்களில் அதிகரிக்கும் எனக் கூறிய அவர், அங்கு அமெரிக்கப் படையினர் வழங்கப்பட்டுள்ள 2014 ஆம் ஆண்டு காலத்திற்கு பின்னரும் நிச்சயமாக நிலைகொண்டிருப்பர்' என்றார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’