மனிதாபிமான உதவிக்கு மக்கள் நன்றி தெரிவிப்பு
கடுமையான இருதய நோய் காரணமாக இன்னமும் 15 நாட்களே உயிர் வாழலாம் என அறிவிக்கப்பட்டிருந்த யாழ்பாணத்தைச் சேர்ந்த 20 வயது யுவதியின் உயிரை இராணுவத்தினரின் தலையீட்டின் மூலம் காப்பாற்ற முடிந்துள்ளது. இந்நாட்டு இராணுவத்தினர் மனிதாபிமானமற்றவர்கள் என சர்வதேசத்தின் ஒரு சில நாடுகளும் உள்ளூரில் சிலரும் பொய் பிரசாரங்களை மேற்கொண்டுவரும் நிலையில் இராணுவத்தினரின் மனிதாபிமான நிலையினை நிரூபிப்பதற்கு இதுவே போதுமான சிறந்த சான்றாகும்.
யாழ்ப்பாணத்தின் அச்சுவேலி பிரதேசத்தில் வசித்துவரும் 20 வயதுடைய கஜிந்தனி கடுமையான இருதய நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். அவரது நோய்க்கு இடையிடையே சிகிச்சை பெற்றுவந்த போதிலும் அது பயனளிக்கவில்லை. கஜிந்தனியின் தந்தை எல்.ரி.ரி.ஈ. அமைப்பில் பணியாற்றிய போது தாக்குதல் ஒன்றிலே உயிரிழந்துள்ளார். அவரது தாயார் கூலி வேலை செய்தே கஜிந்தனி உள்ளிட் அவரது சகோதரர்களை வாழ வைத்துள்ளார். எனினும், குடும்பத்தின் மூத்தவரான கஜிந்தனியின் நோய்த்தன்மையானது அவரது குடும்பத்திற்கு பாரிய சுமையை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 15 ஆம் திகதி யாழ்ப்பாண கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்கவின் ஆலோசனையின் பேரில் யாழப்பாண மக்களுக்காக இலவச மருத்துவ சிகிச்சை முகாமொன்று நடைபெற்றுள்ளது. அதற்கு கொழும்பில் இருந்து பல விசேட நிபுணர்களும் வரவழைக்கப்பட்டிருந்தனர். கடுமையான இருதய நோயால் பாதிக்கப்பட்ட கஜந்தனியும் அதில் சிகிச்சை பெற்றுக் கொள்வதற்காக தமது தாயுடன் சென்றார். அவரை கொழும்பு ஆசிரி வைத்தியசாலையின் இருதய நோய் நிபுணரான இந்தியாவைச் சேர்ந்த டாக்டர் குப்தா பரிசோதித்தார். இதன்போது, கஜிந்தனியின் கடுமையான நோய் நிலையை அறிந்த அவர் உடனடியாக அது பற்றி 511 படைப் பிரிவின் கர்ணல் விஜேந்திர குணதிலக்காவிடம் அறிவித்தவுடன், அவரால் இன்னமும் 15 நாட்களே உயிர் வாழ முடியும் எனவும் அவரது உயிரை காப்பாற்றுவதற்காக உடனடியாக அவரை சத்திர சிகிச்சைக்கு உட்படுத்த வேண்டும் எனவும் அதற்காக சுமார் 10 இலட்சம் ரூபா செலவாகும் என்றும் கூறினார். உடனடியாக அதற்குத் தேவையான தொகையில் சுமார் நான்கு இலட்சம் ரூபாவை கர்ணல் விஜேந்திர குணதிலக்க தமது நண்பர் ஒருவரின் மூலம் பெற்றுக் கொண்டதுடன், ஆசிரி மருத்துவமனையின் சத்திர சிகிச்சை மருத்துவ நிபுணர்களான டாக்டர் அனில் பெரேரா, மஞ்ஜுலா குணரத்ன மற்றும் குப்தா ஆகியோர் இலவசமாக மேற்படி சத்திர சிகிச்சையை செய்து தருவதற்கும் கர்ணால் விஜேந்திரவின் முயற்சியால் இணக்கம் தெரிவித்தனர். அதன் பின்னர் கர்னல் மஹிந்த ஹத்துருசிங்க கஜந்தனியையும் அவரது தாயாரையும் விமானம் மூலம் கொழும்புக்கு அனுப்புவதற்கு நடவடிக்கை எடுத்தார். அதன் பின்னர் கஜந்தினியின் சந்திர சிகிச்சை கடந்த (30) ஆம் திகதி வெற் றிகரமாக முறையில் மேற்கொள்ளப் பட்டது. தற்போது கஜந்தனியின் உடல் நிலை சிறந்ததாக காணப்படுவதுடன் அவருக்கான சிகிச்சை வசதிகளையும் இராணுவத்தினர் வழங்கி வருகின்றனர். மேலும் கஜந்தனி யாழ்ப்பாணம் செல்லும் வரையிலான அனைத்து தேவைகளையும் அவருக்கு வழங்குவதற்கு 3ஆவது விஜயபாகு படையணிக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது. கஜந்தனியின் உயிரை காப்பாற்று வதற்கு இராணுவம் மேற்கொண்ட பாரிய முயற்சிக்கு யாழ்ப்பாணத் தமிழ் மக்கள் இராணுவத்தினருக்கு தமது மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் வருகின்றனர். இது பற்றி கருத்துத் தெரிவித்த கஜந்தனியின் தாயார் இராணுவத்தின் மனிதாபிமான முயற்சியின் காரண மாகவே தமது மகளின் உயிர் காப் பாற்றப்பட்டுள்ளது. அவர்கள் காரணமாக நாம் இன்று மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறோம். நாம் என்றும் அவர்களுக்கு கடமைப் பட்டுள்ளோம் எனக் கூறினார். - தினகரன்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’