கிரிக்கெட்டின் பைபிள் என வர்ணிக்கப்படும் விஸ்டன் சஞ்சிகையினால் இவ்வருடத்தின் சிறந்த சர்வதேச கிரிக்கெட் வீரராக தெரிவு செய்யப்பட்ட குமார் சங்கக்காரவுக்கு ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் இன்று பாராட்டு தெரிவித்துaள்ளது.
'1889 ஆண்டு முதலான, கடந்த கால மாபெரும் வீரர்களின் விசேட குழுவில் குமார் இணைந்துள்ளார். விஸ்டனினால் அவர் வென்ற விருது ஒரு பூகோள அங்கீகாரம் மாத்திரமல்லாமல் உண்மையான மண்ணின் மைந்தன் ஒருவரின் தேசிய சாதனையாகும்' என ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது. 34 வயதான சங்கக்கார 2011 ஆம் ஆண்டின் சிறந்த 5 வீரர்களில் ஒருவராகவும் தெரிவுசெய்யப்பட்ட்ளார். 108 டெஸ்ட் போட்டிகளில் பங்குபற்றிய அவர் 28 சதங்கள் உட்பட 9382 ஓட்டங்களையும் 325 ஒருநாள் சர்வதேச போட்டிகளில் 13 சதங்கள் உட்பட 10472 ஓட்டங்களையும் குவித்துள்ளார். அத்துடன் விக்கெட் காப்பாளராக டெஸ்ட் போட்டிகளில் 167 பிடிகளை கைப்பற்றியுள்ளதுடன் 20 ஸ்டம்பிங்குளையும் செய்துள்ளார். ஒருநாள் சர்வதேச போட்டிகளில் 315 பிடிகள் மற்றும் 80 ஸ்டம்பிங்குகளை கொண்டுள்ளார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’