சர்வகட்சி குழு தொடர்பில் அரசாங்கம் மீண்டும் பேசுவது வேடிக்கையாக உள்ளது. ஏனெனில் ஏற்கனவே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் அமைக்கப்பட்ட அமைச்சர் திஸ்ஸ விதாரணவின் தலைமையிலான சர்வகட்சி முன் வைத்த அரசியல் தீர்வுத் திட்ட யோசனை கேட்பாரின்றி கிடக்கின்றது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் அரியநேத்திரன் தெரிவித்தார்.
புலம்பெயர் தமிழர்களும் வடக்கு மற்றும் கிழக்கில் பிறந்து வாழ்ந்தவர்களே. எனவே இவர்களை புறம் தள்ளி விட்டு தேசியப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது என்பது சாத்தியமற்ற விடயமாகும். ஆகவே அரசாங்கம் இழுபறி நிலையை தொடர்ந்தும் கையாளாது ஆக்கபூர்வமாக செயற்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார். இது தொடர்பாக அரியநேத்திரன் எம்.பி. தொடர்ந்தும் கூறுகையில், தமிழ் மக்களின் அரசியல் உட்பட ஏனைய அனைத்துப் பிரச்சினைகள் தொடர்பிலும் உடனடியாக தீர்வு காண்பது என்பது அத்தியாவசிய விடயமாகும். தொடர்ந்தும் பேச்சுவார்த்தைகள் என்று காலத்தை கடத்துவது அநாவசியப் பிரச்சினைகளையே தோற்றுவிக்கும். அமைச்சர் திஸ்ஸ விதாரணவின் தலைமையில் சர்வகட்சி குழுவொன்று அமைக்கப்பட்டு அதிகாரப் பகிர்வின் அடிப்படையிலான அரசியல் தீர்வு யோசனை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் கையளிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த யோசனை குறித்து பேசாது மீண்டும் புதியதொரு சர்வகட்சி குழு தொடர்பாக அமைச்சர் பசில் ராஜபக்ஷ கருத்து தெரிவித்துள்ளமை வேடிக்கையாக உள்ளது. மூன்றாம் தரப்பொன்றின் தேவை ஏற்பட அரசாங்கத்தின் பொறுப்பற்றபோக்கே காரணமாக அமைந்து தற்போது புலம்பெயர் தமிழர்களை காரணம் காட்டி தீர்வுத் திட்டத்தை காலம் கடத்தவே அரசு முயற்சிக்கின்றது எனக் கூறினார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’