புன்னாலைக்கட்டுவன் ஈவினைப் பகுதியில் புதிய மைதானமொன்றை அமைப்பதற்காக சிரமதானப் பணிகளை பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தொடக்கி வைத்தார். (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)
ஈவினை கிழக்குப் பகுதிக்கு இன்றைய தினம் (20) விஜயம் மேற்கொண்ட அமைச்சர் அவர்கள் அங்கு அமையப் பெற்றுள்ள இந்து மற்றும் கிறிஸ்தவ மயானங்களுக்கு அண்மையான பகுதியில் மைதானமொன்றை அமைப்பதற்காக ஆரம்ப கட்ட சிரமதானப் பணிகளை தொடக்கி வைத்தார். அப்பகுதி மக்கள் பிரதிநிதிகளினால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக இந்நடவடிக்கையை தொடக்கி வைத்ததுடன் மக்களுடைய தேவைகள் கோரிக்கைகள் தொடர்பாகவும் கேட்டறிந்து கொண்டார். இதனிடையே தமக்கு காணிகளைப் பெற்றுத் தருவதுடன் அவற்றை உரிமையாக்கித் தருமாறும் மக்கள் கேட்டுக் கொண்டதற்கமைவாக குறித்த விடயம் தொடர்பில் கவனம் செலுத்தும் அதேவேளை துறைசார்ந்தோரூடாக நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் அமைச்சர் அவர்கள் உறுதிபடத் தெரிவித்தார். இதன் போது வலிதெற்கு பிரதேச செயலர் நந்தகோபாலன் பனை அபிவிருத்திச் சபைத் தலைவர் பசுபதி சீவரத்தினம் ஆகியோர் உடனிருந்தனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’