லங்கை தமிழ் பேசும் மக்களின் குரலை ஐ.நா முதல் தடவையாக அங்கீகரித்துள்ளது. இனப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வை காண்பதற்கு நல்ல வாய்ப்பு ஒன்று கிடைத்திருக்கின்றது.
இதனை புத்திசாலித்தனமாக பயன்படுத்தி அரசாங்கத்தின் தந்திரங்களை முறியடிக்க வேண்டும்' என்று த.தே.கூ.வின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் சம்பந்தன் தெரிவித்தார்.
இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பது தொடர்பில் அரசாங்கம் இனி எவ்வித சாக்கும் போக்கும் கூறி தப்பித்துக்கொள்ள முடியாது. சர்வதேச நாடுகளின் பிடிக்குள் இலங்கை சிக்கியுள்ளது. தமிழ்ப்பேசும் மக்களுக்கென ஒரு அரசியல் முறைமை ஏற்படுத்தப்பட வேண்டும். அதன் மூலம் தான் எம்மை நாமே ஆளும் அதிகாரத்தை பெற முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார். திருகோணமலை மாவட்டத்துக்கான நான்கு நாள் சுற்றுப்பயணத்தை இன்று சனிக்கிழமை காலை ஆரம்பித்த சம்பந்தன் எம்.பி, திருகோணமலை மாவட்டத்தின் வடக்கு எல்லைக் கிராமமான தென்னமரவடி, மற்றும் புல்மோட்டைக்கு, திரியாய் போன்ற கிராமங்களுக்குச் சென்று அங்குள்ள மக்கள் மத்தியில் உரையாற்றும் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவருடன் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, எம்.சுமந்திரன் மற்றும் திருமலை மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் க.துரைரெட்ணசிங்கம் ஆகியோரும் இணைந்து கொண்டனர். அங்கு தொடர்ந்து உரை நிகழ்த்திய சம்பந்தன் எம்.பி, 'தமிழ்ப் பேசும் மக்களின் விடிவைக் கருத்திற்கோண்டு முஸ்லிம் மக்களின் தலைவர்கள் எம்முடன் இணைந்து செயற்பட வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கின்றேன். தமிழ்ப் பேசும் மக்கள் இணைந்து செயற்பட வேண்டிய காலகட்டத்தில் நாம் இருக்கின்றோம். இக்காலகட்டத்தை தமிழ் மக்களுக்காக மாத்திரமல்ல முஸ்லிம் மக்களுக்காக மாத்திரமல்ல இலங்கை தமிழ்ப்பேசும் மக்களுடைய விடிவுக்காக அனைவரும் பயன்படுத்த வேண்டும்' என்று அவர் மேலும் குறிப்பிட்டார்

0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’